தமிழ் நாட்டுப்புறக் கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் நாட்டுப்புறக் கதைகள் என்பது தமிழரிடையே வழங்கி வரும் நாட்டுப்புறக் கதைகள் ஆகும். தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் போன்றே, நாட்டுப்புற மக்களிடம் பல வகைக் கதைகள் வழங்கி வருகின்றன. இந்தக் கதைகள் வாய்மொழியாக பல நூற்றாண்டுகள் வழங்கி வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் இவற்றின் ஒரு பகுதி அச்சுப் பதிப்புப் பெறத் தொடங்கின.

வகைப்பாடு[தொகு]

தமிழ்க் கலைக்களஞ்சியம் வகைப்பாடு

  • நீதிக் கதைகள்
  • தந்திரக் கதைகள்
  • ஏளனக் கதைகள்
  • நகைச்சுவைக் கதைகள்
  • நம்பிக்கைக் கதைகள்
  • கற்பனைக் கதைகள்
  • வஞ்சகக் கதைகள்

முனைவர் அய்யனார் வகைப்பாடு

  • பண்பு விளக்கக் கதைகள்
  • நீதி விளக்கக் கதைகள்
  • சமயமரபு தழுவிய கதைகள்
  • சமூக வரலாற்றுக் கதைகள்
  • நகைச்சுவைக் கதைகள்
  • குலமரபுக் கதைகள்
  • நம்பிக்கை விளக்கக் கதைகள்
  • இயற்கை இகந்த கதைகள்
  • பிறவகைக் கதைகள்

கி. ராசநாராயணன் வகைப்பாடு

  • சாதியக் கதைகள்
  • ஏழை, பணக்காரன்
  • அறிவாளிகளும், அல்லாதோரும்
  • ராசா குடிமகன்
  • புருசன் மனைவி
  • மாமியார் மருமகன்
  • சொக்காரங்கள் பிரியம், பகை, பொறாமை
  • கடவுள்
  • காடுகள், மிருகங்கள், பட்சிகள்
  • பேய், பிசாசு, பூதம்
  • மதங்கள்
  • வீரம்
  • தனிநபர் போற்றுதல்
  • குழந்தைகள்
  • நகைச்சுவை
  • பால் உணர்ச்சிக் கதைகள்
  • குடும்பம், பாசம்
  • நட்பு
  • அரசியல் முதலியன

அச்சிடல்[தொகு]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முனபகுதியில் இந்தியாவின் அச்சு வரலாற்றில் பல செவிவழி இலக்கியங்கள், முக்கியமாக நாட்டுப்புறக் கதைகள் பதிப்பிக்கப்பட்டன. 1800ஆம் ஆண்டு முதல் 1835 வரை தமிழில் பதிப்பிக்கப்பட்டவற்றில் பெரும்பான்மையாக, அகரமுதலிகளையும் இலக்கணங்களையும் தவிர்த்து, செவிவழிக் கதைகளின் தொகுப்புகள் இருந்தன. புகழ்பெற்ற இலக்கிய நூல்களான திருக்குறள், நாலடியார் போன்றவை பதிப்பிக்கப்பட்டன என்றாலும் இவற்றை விட பலமடங்கு செவிவழிக் கதைகளே பிரசுரமாயின. [1] . இவற்றில் முதன்மையானதாக விக்கிரமாதித்தன் கதைகள் 1804ஆம் ஆண்டு வெளியானது. 1808ஆம் ஆண்டில் சதமுக ராவணன் கதை"யும் 1812ஆம் ஆண்டில் மரியாதைராமன் கதை மற்றும் தமிழறியும் மந்தை கதை"யும் 1819ஆம் ஆண்டு "புரூரவ சக்கரவர்த்தி கதை"யும் 1820ஆம் ஆண்டில் சிறுகதைத் தொகுப்பான கதைமஞ்சரியும் வெளியாயின. 1822ஆம் ஆண்டு இலண்டனிலிருந்து தமிழ்,ஆங்கிலம் இருமொழிகளிலும் "பரமார்த்த குருவின் கதை" (குரு சிம்பிள்டன்) வெளியானது. 1826ஆம் ஆண்டு தமிழில் "பஞ்சதந்திரக் கதை"களும் 1833ஆம் ஆண்டு மற்றொரு செவிவழிக்கதைகளின் தொகுப்பான "கதாசிந்தாமணி"யும் பதிப்பிக்கப்பட்டன. ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஈசாப் கதைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1850களில் வெளியிடப்பட்டன.

நூல்கள்[தொகு]

  • மயில்ராவணன் கதை - வீராச்சாமி நாயக்கர் (1867)
  • நாட்டுப்புறக் கதைகள் - கா. அப்பாதுரை
  • தென்னாட்டுப் பழங்கதைத் தொகுதிகள் -சு. அ. இராமசாமிப் புலவர்
  • தமிழ் நாட்டுப் பழங்கதைகள் - வை. கோவிந்தன்
  • தமிழ் நாட்டு நாடோடிக் கதைகள் - கி. ராஜநாராயணன்
  • தமிழக கிராமியக் கதைகள் - கு. சின்னப்ப பாரதி
  • பாரத நாட்டுப் பாட்டிக் கதைகள் - வை. கோவிந்தன்
  • நாட்டார் கதைகள் - அ.கா. பெருமாள்
  • கொங்கு நாட்டுப்புறக் கதைகள் - க. கிருட்டின சாமி
  • தாத்தா சொன்ன கதைகள்- கி.ராஜநாராயணன்

நாட்டுப்புறக் கதைகள் - ஆறு.இராமநாதன் நாட்டுப் புறவியல் (தொகுப்பு நூல்) - பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் கதைகள், உலக நாடோடிக் கதைகள், அரபுக் கதைகள், தெனாலிராமன் கதைகள், நவரத்தினமாலை (சோவியத் நாட்டுக் கதைகள்), ஆர்மீனிய நாடோடிக் கதைகள், கிரேக்க நாடோடிக் கதைகள் போன்றவற்றின் தொகுப்பு.


இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Stuart Blackburn (2004), பக்கம் 122

உசாத்துணைகள்[தொகு]

  • சு. சக்திவேல். (2003). நாட்டுப்புற இயல் ஆய்வு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

வெளி இணைப்புகள்[தொகு]