உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் எழுத்தொலி பிறத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருவர் எழுத்தை உச்சரிக்க முயலும் போது கொப்பூழில் (உந்தி) இருந்து காற்று மேல் நோக்கி எழுகின்றது. இவ்வாறு எழும் காற்று அவரது தலை, கழுத்து, நெஞ்சு (மார்பு) ஆகிய இடங்களில் சென்று தங்கி (தொட்டு) நிற்கும். பின்னர், தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இந்த மூன்று உறுப்புகளுடன், பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் (மேல்வாய்) ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து இந்த எட்டு உறுப்புகளின் பொருத்தமான முயற்சியின் விளைவாக வெவ்வேறு எழுத்து ஒலிகள் பிறக்கின்றன. தமிழில் உள்ள எல்லா எழுத்து ஒலிகளும் இந்த முறையிலேயே பிறக்கின்றன. இதுவே எழுத்துப் பிறப்பின் பொதுவான இலக்கணம் ஆகும், இதை எழுத்தொலி பிறத்தல் என்றழைக்கப்படுகிறது.[1]

ஆதாரம்

[தொகு]

(தொல்காப்பியம். எழுத்ததிகாரம்,83)

  1. http://tamilvu.org/courses/degree/c021/c0212/html/c02121nd.htm