தமிழ் இலக்கிய வரலாறு (சி. பாலசுப்பிரமணியன் நூல்)
தோற்றம்
| தமிழ் இலக்கிய வரலாறு | |
|---|---|
| நூல் பெயர்: | தமிழ் இலக்கிய வரலாறு |
| ஆசிரியர்(கள்): | சி. பாலசுப்பிரமணியன் |
| வகை: | மொழி |
| துறை: | வரலாறு |
| இடம்: | சென்னை 600 029 |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 408 |
| பதிப்பகர்: | நறுமலர்ப்பதிப்பகம் |
| பதிப்பு: | 21ஆம் பதிப்பு 1992 |
தமிழ் இலக்கிய வரலாறு என்பது சி. பாலசுப்பிரமணியன் என்பவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தினை வரலாற்று ரீதியாக ஆராயும் நூலாகும். [1]
அமைப்பு
[தொகு]இந்நூல் பழமையும் சிறப்பும், சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்ற நிலையில் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்கிறது. இந்நூல் மு. வரதராசனின் அணிந்துரையைக் கொண்டுள்ளது.
பிற்சேர்க்கை
[தொகு]நூலின் பிற்சேர்க்கையாக ஐரோப்பியர் வருகை, அச்சு இயந்திரத்தின் தோற்றம், இந்திய நாட்டின் விடுதலை இயக்கமும் தமிழ்நாட்டில் அதன் செல்வாக்கும், சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற தமிழ் நூல்கள், வினாத்தாள்கள் போன்றவை அமைந்துள்ளன.
உசாத்துணை
[தொகு]'தமிழ் இலக்கிய வரலாறு', நூல், (1992; நறுமலர்ப்பதிப்பகம், சென்னை 600 029, விற்பனை உரிமை பாரி நிலையம்)