தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம் என்பது மூலிகைமணி முனைவர் க. வெங்கடேசன் எழுதிய நூல் ஆகும்.

நூலாசிரியர்[தொகு]

முனைவர் க. வெங்கடேசன் சென்னையைச் சார்ந்த தமிழ் மரபு மருத்துவர் ஆவார்.இவர் மூலிகைமணி என்னும் திங்களிதழின் ஆசிரியராக செயற்பட்டு வருகின்றார்.

பதிப்பு விவரங்கள்[தொகு]

இந்நூலை சிறீ சக்தி பதிப்பகம், 1998 இல் முதற் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

நூலின் முகவுரைச் செய்திகள்[தொகு]

இந்நூலின் முன்னுரையில் முனைவர் க. வெங்கடேசன் 1976 முதல் 1980 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் சி. பாலசுப்பிரமணியம் வழிகாட்டுதலில் தான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப் பெற்றுள்ளதை விளக்கியுள்ளார்.

உள்ளடக்கம்[தொகு]

இந்நூலில் ஆய்வு அறிமுகம் செய்யப்பெற்று அதன் நோக்கங்களும் ஆய்வுப்பரப்பும் விளக்கப் பெற்றுள்ளன. ஆய்வு மூலங்கள் அளிக்கப் பெற்றுள்ளன. இயல் ஒன்றில் தமிழ் இலக்கியத்தில் மருத்துவக் கலைக் குறிப்புகள் குறித்த ஆய்வுரையை வழங்கியுள்ளார். இயல் இரண்டில் சித்த மருத்துவ நூல்களில் மருத்துவக்கலை குறித்த ஆய்வுக் குறிப்புகளை அளித்துள்ளார். இயல் மூன்றில் நாட்டுப்புற இலக்கியத்தில் மருத்துவக்கலை குறித்தான ஆய்வுக்குறிப்புகளை அளித்துள்ளார். ஆய்வு முடிவு என்னும் பகுதியில் தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம் தொடர்பான கருத்துக்களைத் தொகுத்து அளித்துள்ளார். பின்னிணைப்புகள் பகுதியில் சித்த மருத்துவ நூற்பட்டியல், அருஞ்சொற் பொருள் விளக்கம், ஆய்வு குறித்தான துணை நூற்பட்டியல் ஆகியன அளிக்கப்பெற்றுள்ளன.