தமிழ் இலக்கண விரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் இலக்கணப் பகுப்புகள் காலப்பாதையில் விரிந்தன.

  • முத்தமிழ்
இயல், இசை, நாடகம்

இயல்-தமிழ் இலக்கண விரிவு[தொகு]

  • 3 பிரிவு
எழுத்து, சொல், பொருள்

இயல்தமிழ் இலக்கணத்தில் எழுத்து. சொல் ஆகிய இரண்டும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுவன. பொருள் இலக்கணம் தமிழரின் வாழ்வியல் பாங்கைக் கூறுவது. அத்துடன் தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்னும் செய்தியையும் கூறுகின்றன.

தொல்காப்பியம் தமிழ் இலக்கணத்தைத் தமிழ்மரபில் பகுத்துக் கண்டது. பின்னர் பொருள் இலக்கணம் ஐந்தாகப் பிரிந்தது. பிரிவில் தமிழ்மரபு இருந்தது. பிரிப்பின் சேர்க்கையில் தமிழ்மரபோடு வடமொழி மரபும் ஒட்டிக்கொண்டது. இப்படி விரிந்தவையே பாகுபாட்டுப் பிரிவுகள்.

தொல்காப்பியர் தமிழ் இலக்கணத்தை இவ்வாறு மூன்று பகுதிகளாகக் கண்டார். இதில் உள்ளுறை உவமம், ஏனை உவமம் பற்றிய குறிப்புகளும் உள்ளன. இவை அணியிலக்கணத்துக்கு அடிப்படை. யாப்பியல் என்னும் பகுதி யாப்பிலக்கணத்துக்கு அடிப்படை.

  • 4 பிரிவு
எழுத்து, சொல், பொருள். யாப்பு
  • 5 பிரிவு – வீரசோழியம்
எழுத்து, சொல், பொருள். யாப்பு, அணி
  • 6 பிரிவு – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
எழுத்து, சொல், பொருள். யாப்பு, அணி, புலமை

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
  • தமிழ் இலக்கண நூல்கள் மூலம் முழுவதும், குறிப்பு விளக்கங்களுடன், பதிப்பாசிரியர் முனைவர் ச. வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_இலக்கண_விரிவு&oldid=2812139" இருந்து மீள்விக்கப்பட்டது