தமிழ் இலக்கணத் தொடர்கள் (பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் மொழி இலக்கணமானது எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் என்னும் இரு பாகுபாடுகளில் சொல்லப்படுகிறது. தமிழில் வாழ்வியல் கருத்துகளைக் கூறும் பொருள்-இலக்கணம் என்னும் பகுதியும் உண்டு. இது பிற மொழிகளில் வரையறுக்கப்படாத ஒருவகை இலக்கணம். இதில் அகம், புறம் என்னும் பாகுபாடுகளும், அகத்தில் களவு, கற்பு, என்னும் பாகுபாடுகளும் உள்ளன. இவை வாழ்வியல் பாகுபாடுகள். இன்றுள்ள நூல்களில் காலத்தால் மிகவும் பழமையான தொல்காப்பியம் இவற்றை விளக்குகிறது.மேலும்,

  • மனவெழுச்சிகளைக் கூறும் மெய்ப்பாடு
  • உயிரினத்தை ஓரறிவு, ஈரறிவு என்றெல்லாம் பாகுபடுத்தும் செடியியல், உயிரியல் பாகுபாடுகள்

முதலானவை உள்ளன. அன்றியும் இலக்கியங்களில் காணப்படும்

  • உவம-இயல்
  • செய்யுள்-இயல்

என்னும் பாகுபாடுகளும் உள்ளன.பொருள் இலக்கணப் பகுதியில் வரும் நால்வகைக் குலப்பாகுபாடும், இறுதியில் இணைக்கப்பட்டுள்ள உத்தி முதலான பாகுபாடுகளும் இடைச்செருகல்கள் என அறிஞர்கள் கருதுகின்றனர். [1]

தொல்காப்பியத்தில் காணப்படும் பொருள் இலக்கணத் தொடர்கள் இங்குத் தொகுக்கப்பட்டு விளக்கங்கள் அந்த நூலை அடியொற்றித் தரப்படுகின்றன. பொருள் இலக்கணம் கூறும் இறையனார் களவியல், [[புறப்பொருள் வெண்பாமாலை)), நம்பியகப்பொருள் ஆகிய நூல்களில் கூறப்படும் தொடர்கள் இங்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

புறத்திணை[தொகு]

  • உடனிலை
  • எட்டி
  • காவிதி
  • மாராயம்

அகத்திணை[தொகு]

  • இறைச்சிப் பொருள் [2]
  • களவு
  • கற்பு

அடிக்குறிப்பு[தொகு]

  1. Prof. S. Ilakkuvnar, Tolkappiyam in English with critical sties, 1963, page 23
  2. analogue