தமிழ் இணைய இதழ்களின் வகைப்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அச்சு இதழ்கள் வாரம், மாதமிருமுறை, மாதம் என்று குறிப்பிட்ட கால அளவுகளை வரையறுத்து வெளியிடப்படுவது போல் தமிழ் இணைய இதழ்கள் குறிப்பிட்ட கால அளவுகளைக் கொண்டு புதுப்பிக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன. தமிழ் இணைய இதழ்களைப் படிப்பவர்களுக்கு சில இதழில் இருக்கும் உள்ளடக்கங்கள் பயனளிப்பதாக இருக்கிறது. சில இதழ்கள் பொழுதுபோக்கிற்கு உதவுகிறது. சில இதழ்கள் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இந்த உள்ளடக்கங்களினால் வெளிப்படும் தன்மைகளும் மாறுபடுகிறது. எனவே தமிழ் இணைய இதழ்களின் உள்ளடக்கம், கால அளவுகள் மற்றும் தன்மைகள் ஆகியவற்றைக் கொண்டு வகைப்பாடுகள் செய்யலாம்.

உள்ளடக்கம்[தொகு]

இணையத்தில் வெளிவரும் தமிழ் இதழுக்கும் அதன் உள்ளடக்கங்கள் வேறுபடுவதால் இந்த உள்ளடக்கங்களைக் கொண்டு இவற்றை முதலில் வகைப்படுத்தலாம்.

 1. ஆன்மீகம்
 2. சமூகம்
 3. அரசியல்
 4. இலக்கியம்
 5. ஆய்வு
 6. பகுத்தறிவு
 7. பெண்கள்
 8. சமையல்
 9. நகைச்சுவை
 10. திரைப்படங்கள்
 11. அறிவியல் & தொழில்நுட்பம்
 12. வணிகம்
 13. சோதிடம்
 14. சிறுவர்
 15. கவிதை
 16. மருத்துவம்
 17. நூலகம்
 18. திருமணம்
 19. பல்சுவை
 20. பாலியல் உறவுகள்
 21. சங்க அமைப்புகள்
 22. தனி மனிதக் கருத்துக்கள்
 23. திரட்டிகள்

என்று உள்ளடக்கங்களைக் கொண்டு 23 வகையாகப் பிரிக்கலாம்.

ஆன்மீகம்[தொகு]

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள இனங்களில் அவர்கள் அதிகமாகச் சார்ந்துள்ள மூன்று மதங்களின் அடிப்படையில் கொள்கை, கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகளை வெளிப்படுத்தும் தகவல்களை அதிகமான உள்ளடக்கங்களாகக் கொண்டு சில இணைய இதழ்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆன்மீக வழியிலான இந்த இணைய இதழ்களை மதங்களின் அடிப்படையில் மூன்று உட்பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

இந்து மதம்[தொகு]

கடவுள் பல வடிவங்களில் பல பெயர்களில் இருப்பதான நம்பிக்கையும் ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியான சக்தி இருப்பதான நம்பிக்கையும் இந்து மதத்தில் இருக்கிறது. இதனால் இந்துமதக் கருத்துக்களை வலியுறுத்தும் இணையச் சிற்றிதழ்களில் பொதுவான இந்து மதக் கருத்துக்களை விட குறிப்பிட்ட இந்துமதக் கடவுள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை வலியுறுத்தும் தகவல்கள் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன.

சில இணைய இதழ் முகவரிகள்

கிறித்துவ மதம்[தொகு]

கிறித்துவ மத அடிப்படையிலான தமிழ் வேதாகமக் கருத்துக்கள், கிறித்துவப் பாடல்கள், கிறித்துவக் கொள்கைகள், கிறித்துவ மதச் செய்திகள், தகவல்கள் என்று கிறித்துவ மதத்தை வலியுறுத்தும் தகவல்கள் இங்கு அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.

சில இணைய இதழ் முகவரிகள்

இசுலாமிய மார்க்கம்[தொகு]

இசுலாத்தின் புனித நூலான திருக்குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள், இறைதூதர்கள், இசுலாத்தில் கடைப்பிடிக்கப்படும் தொழுகை, நோன்புகள் என்று இசுலாமிய கருத்துக்களை வலியுறுத்தும் பல தகவல்கள் இங்கு முக்கியச் செய்திகளாக இடம் பெற்றிருக்கின்றன.

சில இணைய இதழ் முகவரிகள்

சமூகம்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

அரசியல்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

இலக்கியம்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

ஆய்வு[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

பகுத்தறிவு[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

பெண்கள்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

சமையல்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

நகைச்சுவை[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

திரைப்படங்கள்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

அறிவியல் & தொழில் நுட்பம்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

வணிகம்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

சோதிடம்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

சிறுவர்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

கவிதை[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

மருத்துவம்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

நூலகம்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

திருமணம்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

பல்சுவை[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

பாலியல் உறவுகள்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

சங்க அமைப்புகள்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

திரட்டிகள்[தொகு]

சில இணைய இதழ் முகவரிகள்

கால அளவுகள்[தொகு]

அச்சு இதழ்கள் கால அளவின் அடிப்படையில் வெளியிடப்படுவதைப் போன்று இணையத்தில் வரும் இதழ்கள் வாரம் ஒருமுறை, மாதமிருமுறை, மாதம் ஒருமுறை என்கிற கால அளவுகளில் புதுப்பிக்கப்படுகின்றன. பல இணைய இதழ்கள் குறிப்பிட்ட கால அளவுகள் ஏதுமின்றி அதை நடத்துபவரின் விருப்பத்திற்கேற்பவும், அதற்கான படைப்புகள் கிடைப்பதற்கேற்பவும், அவ்வப்போது வலைப்பதிவரின் வசதிக்கேற்பவும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சில முக்கிய இணைய இதழ்கள் கால அளவு முறையைச் சரியாகப் பின்பற்றி வருகின்றன. இவற்றில் குறிப்பாக தமிழோவியம் , நிலாச்சாரல் , வார்ப்பு போன்ற இணைய இதழ்கள் வாரம் ஒரு முறையும், முத்துக்கமலம் மாதம் இருமுறையும், பதிவுகள் மாதம் ஒரு முறையும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல இணைய இதழ்கள் புதுப்பிக்கப்படும் கால நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தன்மை[தொகு]

அச்சு இதழ்களைப் போல் இணையத்தில் வரும் இதழ்களையும் அதன் உள்ளடக்கத்தில் இருக்கும் கருத்துக்களின் தன்மைகளுக்கேற்ப மூன்று வழியில் வகைப்படுத்தலாம்.

 1. தரம்
 2. நடுத்தரம்
 3. தரமில்லாதவை

தரம்[தொகு]

ஆழமான பொருள் நிறைந்த உள்ளடக்கங்களுடன், தகுதியுடையவர்கள் படிக்கக் கூடிய உயர்தரமான இதழ்கள் என்று கருதக்கூடிய இதழ்களை இந்த உட்பிரிவின் கீழ் கொண்டு வரலாம். இந்தத் தன்மையில் மிகக் குறைவான இதழ்களே இருக்கின்றன.

நடுத்தரம்[தொகு]

பொழுதுபோக்கு நோக்கத்துடன் படித்துப் பார்த்து மகிழ்ச்சி அடையும் தன்மையில்தான் அனைவரும் இருக்கின்றனர். இந்தத் தன்மையில்தான் அதிகமான தமிழ் இணைய இதழ்கள் இருக்கின்றன. பார்ப்பவர்கள் மற்றும் படிப்பவர்கள் மனத்தில் தீய எண்ணங்களை உருவாக்கும் தரம் குறைவான இதழ்களைத் தவிர்த்து, பொழுதுபோக்கிற்கு உதவும் அனைத்து வகையிலான இதழ்களும் நடுத்தரமானது என்று வகைப்படுத்தலாம்.

தரமில்லாதவை[தொகு]

மனத்தில் தீய எண்ணங்களை உருவாக்கும் வழியில் படங்கள், கதை , கட்டுரை மற்றும் செய்திகளை உள்ளடக்கங்களாகக் கொண்டு பார்ப்பவர்கள் மற்றும் படிப்பவர்களைத் தவறான வழிக்குக் கொண்டு செல்வதுடன் சமூகச் சீர்கேடுகளை உருவாக்கும் தன்மையில் சில இணைய இதழ்கள் இணையத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆதாரம்[தொகு]

இதையும் பார்க்க[தொகு]