தமிழ்வழிக் கல்வி இயக்கம் (அமைப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்வழிக் கல்வி இயக்கம் என்பது வ. சுப. மாணிக்கம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். இது 'கல்வித்துறையில் எங்கும் எதிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாதல்;மழலைப் பள்ளி எல்லாம் தமிழ் வழிப் பள்ளியாதல்' என்னும் நோக்கம் கொண்டது. வ. சுப. மாணிக்கம் வெளியிட்ட 'மொழி அறிக்கை' இந்த அமைப்பின் கொள்கைகளை விளக்குகிறது.