தமிழ்வழிக் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்வழிக் கல்வி என்பது தமிழ் கல்விமொழியாக முதன்மையாக அமையும் கல்வி முறைமை ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ்வழிக் கல்வி உள்ளது.

இந்தியா[தொகு]

தமிழ்நாடு[தொகு]

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதன்மையாக தமிழ்வழிக் கல்வி உள்ளது. தனியார் பள்ளிகளில் முதன்மையாக ஆங்கில வழிக் கல்வி உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் 2005-2006 கணக்கின்படி EGS பள்ளிகள் மற்றும் வகைப்படுத்தப்படாத பள்ளிகள் தவிர்த்து 51529 அடிப்படைக் கல்விப் பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளன.[1] இதில் 16,997 பள்ளிகள் உதவி வழங்கப்படும் அல்லது முற்றிலும் தனியார் பள்ளிகள் ஆகும். இந்தக் கணக்கீட்டின் படி சுமார் 67% மாணவர்கள் தமிழ் வழியில் தமது அடிப்படை கல்வியின் ஒரு பகுதியையாவது பெறுவர் என்று ஊகிக்கலாம். உயர் வகுப்புக்களில் இந்த விழுக்காடு கணிசமாக மாறுகின்றது. மொத்த 4632 மேல்நிலைப் பள்ளிகளில், 40% மட்டுமே முழுமையான அரசு பள்ளிகள். 1099 அல்லது 24% பள்ளிகள் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், 1677 அல்லது 36% பள்ளிகள் முற்றிலும் தனியார் பள்ளிகள் ஆகும். இதே கணிப்பீட்டின் படி 10,080,179 பள்ளி வயது மாணவர்கள் உள்ளார்கள்.[2] எனவே சுமார் 6.7 மில்லியன் மாணவர்கள் தமது அடிப்படைக் கல்வியின் ஒரு பகுதியை தமிழ் வழியில் பெறுகிறார்கள் என்று கூறலாம்.

கேரளா[தொகு]

கேரளத்தில் 26883 மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியைப் பெறுகிறார்கள்.[3]

கேரளாவில் அரசு, அரசு உதவி பெறு, அரசு உதவி பெறாத 74 தனித் தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன. 128 இணைத் தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன.[4]

இலங்கை[தொகு]

இலங்கையில் கல்வி மொழி அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை, மாவட்டங்கள் வாரியாக - 2016

2016 ஆம் ஆண்டு இலங்கை அரசின் புள்ளிவிபரங்களின் படி இலங்கையில் மொத்தம் 4,143,330 பள்ளி போகும் அனைத்து மொழி மாணவர்கள் உள்ளார்கள். இதில் 1,028,032 மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியைப் பெறுகின்றார்கள். இலங்கையில் மிகப் பெரும்பான்மையான மாணவர்கள் (95%) தாய்மொழிக் கல்வியையை அரசு பள்ளியின் ஊடாகப் பெறுகின்றார்கள்.[5]

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தமிழ்ப் பள்ளிதானும் உள்ளது. இலங்கையில் 2989 தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன. 66 சிங்களமும் தமிழும், 168 தமிழும் ஆங்கிலமும் பயிற்று மொழியாக உள்ள பள்ளிகள் உள்ளன. [6]

மலேசியா[தொகு]

மலேசியாவில் தமிழ் வழி அடிப்படை கல்வி உள்ளது. மலேசிய பொதுக் கொள்கை ஆய்வுக்கான நடுவத்தின் (Centre for Public Policy Studies) அறிக்கை ஒன்றிபடி மலேசியாவில் 2012 இல் மலேசியாவில் 523 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. 55% இந்திய மாணவர்கள் தமிழ்வழிக் கல்விப் பள்ளிக்குச் செல்கிறார்கள்.[7] 2007 இல் 105,618 மாணவர்கள் தமிழ்ப் பள்ளியில் கல்வி கற்றார்கள்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாட்டில் கல்வி புள்ளிவிபரம்" (PDF). அனைவருக்கும் கல்வி இயக்கம். 2016-11-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 12 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "தமிழ்நாட்டில் கல்வி புள்ளிவிபரம்" (PDF). அனைவருக்கும் கல்வி இயக்கம். 2016-11-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 12 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Selected Educational Statistics - 2010-2011" (PDF). கேரள அரசு - புள்ளிவிபரங்கள் பிரிவு. 2015-06-16 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 12 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Selected Educational Statistics - 2010-2011" (PDF). கேரள அரசு - புள்ளிவிபரங்கள் பிரிவு. 2015-06-16 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 12 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "School Census Preliminary Reports 2016" (PDF). கல்வி அமைச்சு, இலங்கை. 8 டிசம்பர் 2016. 2017-01-10 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 12 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. "School Census Preliminary Reports 2016" (PDF). கல்வி அமைச்சு, இலங்கை. 8 டிசம்பர் 2016. 2017-01-10 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 12 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. "VERNACULAR SCHOOL S IN MALAYSIA: "A heritage to be celebrated or a hindrance to nation building?"" (PDF). Centre for Public Policy Studies. 23 ஏப்பிரல் 2012. 2015-10-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 12 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  8. 28 செப்ரம்பர் 2007. "Tamil Schools". Tamil Nesan. 12 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்வழிக்_கல்வி&oldid=3369155" இருந்து மீள்விக்கப்பட்டது