தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் இலக்கிய உலகப் பெண்களை நினைத்தால் மனதில் உடனே தோன்றுபவர் ஒளவையார்தான். இதையடுத்து ஆண்டாள், காக்கைப் பாடினியார், காரைக்கால் அம்மையார் போன்று ஒரு சிலரே தெரிந்தவராக உள்ளனர். தமிழ் இலக்கியங்களில் ஆதி மந்தியார், குற மகள் இளவெயினியார், வெறிபாடிய காமக் கண்ணியார், கீரன் எயிற்றியார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், குமுழி ஞாழல் நப்பசையார், வெள்ளி வீதியார், பூதப்பாண்டியனின் உள்ளங் கவர்ந்த பெருங்கோப்பெண்டு, பாரிமகளிர் என்று தமிழ்ப் பெண்பாற் புலவர்களின் பட்டியல் நீளமானது.

நாகூரைச் சேர்ந்த சித்தி ஜூனைதா பேகம் என்ற பெண்மணிதான் முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர்.[சான்று தேவை] இவர் எழுதிய முதல் சிறுகதை, 1929ஆம் ஆண்டு தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது.

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பட்டியல்[தொகு]