உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ப் பழமொழிகள் ஓர் ஆய்வு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ப் பழமொழிகள் ஓர் ஆய்வு என்பது முனைவர் சு. சக்திவேல் எழுதிய நூலாகும்.[1]

நூலாசிரியர்

[தொகு]

முனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், நாட்டார் வழக்காற்றியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியக் கல்வியாளர் ஆவார். இவர் நாட்டார் வழக்காற்றியல் துறையிலும், இதழியல் துறையிலும் நூல்களை எழுதியுள்ளார்.

பதிப்பு விவரங்கள்

[தொகு]

தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத்துறை, தஞ்சாவூர். இந்நூலின் முதற் பதிப்பு திசம்பர் 2004 இல் வெளிவந்துள்ளது.

நூலின் முகவுரைச் செய்திகள்

[தொகு]

நாட்டார் வழக்காற்றியலின் ஒரு கூறான பழமொழிகள் குறித்த ஆய்வே இந்நூல் என்கின்றார் நூலாசிரியர்.

நூல் அணிந்துரை

[தொகு]

இந்நூல் நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு ஓர் புதிய வரவு என்று எழுதியுள்ளார் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் இ. சுந்தர மூர்த்தி.

உள்ளடக்கம்

[தொகு]

இத்தொகுப்பில் பழமொழிகளைத் தொகுத்து 7 பெருந்தலைப்புகளில் விளக்கம் அளித்துள்ளார் நூலாசிரியர். இத்தொகுப்பிலுள்ள பல பழமொழிகளுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கத்தினையும், ஆய்வுரையையும் நூலாசிரியர் அளித்துள்ளார். இத்தொகுப்பில் உள்ளவை கள ஆய்வுப் பழமொழிகள் ஆகும்.

இந்நூலில் 1. முன்னுரை, 2. தமிழ்ப்பழமொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும், 3. தமிழ்ப் பழமொழிகளை வகைப்படுத்துதல், 4. தமிழ்ப்பழமொழிகள் காட்டும் சமுதாயமும் பண்பாடும், 5. தமிழ்ப்பழமொழிகள்- நடையியல் ஆய்வு, 6. தமிழ்ப்பழமொழிகள்- அமைப்பியல் ஆய்வு, 7. தமிழ்ப்பழமொழிகள்- உளவியல் ஆய்வு, பின்னிணைப்பு, துணை நூற் பட்டியல் ஆகிய தலைப்புகளின் அடிப்படையில் பழமொழிகளை விவரிப்பியல் ஆய்விற்கு நூலாசிரியர் உட்படுத்தியுள்ளார்.

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழ்ப் பழமொழிகள் ஒர் ஆய்வு". www.tamildigitallibrary.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.