தமிழ்நாட்டு இந்துத்துவ அமைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டில் இந்துதத்துவா கொள்கைகளை தீவரமாக வலியுறுத்தும் அமைப்புகளை தமிழ்நாட்டு இந்துத்துவ அமைப்புகள் எனலாம்.


தமிழ்நாட்டு இந்துத்துவ அமைப்புகள் சமய, சமூக, பண்பாட்டு, அரசியல் களங்களிலேயே முக்கியமாக இயங்குகின்றன. இவை பொருளாதரக் கொள்கைகளை நோக்கி நிலையான அல்லது தெளிவான கொள்கைகளைக் கொண்டிருக்காவிடிலும்(ஆதாரம் தேவை), இந்த அமைப்புகளினது முதன்மை அமைப்பாக கருதப்படக் கூடிய பாரதிய ஜனதா கட்சி வலது சாரிக் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டது.


இந்துத்துவ அமைப்புகளினது முக்கிய குறிக்கோள் இந்து சமயத்தை, மரபுகளை, சடங்குகளை, வரலாறைப் பேணுவதாகும். குறிப்பாக இஸ்லாமிய ஆதிக்கம், காலனித்துவ மேற்குநாட்டுகளின் ஆதிக்கம், கிறீஸ்தவ ஆதிக்கம் ஆகியவற்ற்கு எதிராக இயங்கி இந்தியாவின் தனித்துவத்தை, மரபை, இந்து சமயத்தை, பாண்பாட்டை பேண விழைகின்றன. தமிழ்நாட்டை இந்திய பெரும் பண்பாட்டின் ஒரு கூறாக வரையறை செய்து, அந்தப் பெரும் பண்பாட்டை பேணுவதன் மூலமே தமிழ்நாட்டின் நலனைப் பேணலாம் என கருதுகின்றன (ஆதாரம் தேவை). அதன் நீட்சியாக தமிழையும், தமிழரையும், தமிழ்நாட்டையும் முதனைமைப் படுத்தும் திராவிட இயக்கத்துடனும் தமிழ் தேசியத்துடனும் பல இடங்களில் முரண்பட்டு நிற்கின்றன (ஆதாரம் தேவை).

ஆதரவும் அதிகாரமும்[தொகு]

இந்தியாவின் வடக்கு மாநிலங்கள், கர்நாடகா போலன்றி தமிழ்நாட்டில் தீவர இந்துத்துவ கொள்கைகள் என்றும் பெரும்பான்மை சமூக, அரசியல் ஆதரவும் அதிகாரமும் பெறவில்லை(ஆதாரம் தேவை).

பட்டியல்[தொகு]