தமிழ்நாட்டுக் கோயில்களின் கருணை இல்லங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாட்டுக் கோயில்களில் குறிப்பிட்ட சில கோயில்களின் நிர்வாகத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப்பதற்கான கருணை இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2005 - 2006 ஆம் ஆண்டில் 37 கோயில்களின் நிர்வாகத்தின் கீழ் 42 கருணை இல்லங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது இது 31 கோயில்களின் நிர்வாகத்தின் கீழ் 34 கருணை இல்லங்கள் என குறைந்து போய் விட்டன.

வ.எண் கருணை இல்லம் அமைந்துள்ள ஊர் வகை நிர்வகிக்கும் கோயில்
1 திருவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு.
2 திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் சிறுவர்-1, சிறுமியர்-1 அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில், திருத்தணி.
3 பழனி, திண்டுக்கல் மாவட்டம் சிறுவர்-1, சிறுமியர்-1 அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழனி.
4 சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்.
5 மதுரை, மதுரை மாவட்டம் சிறுமியர்-1 அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை.
6 திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்.
7 இராமேசுவரம், இராமநாதபுரம் மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம்.
8 மயிலாப்பூர், சென்னை மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,மயிலாப்பூர்.
9 மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், மருதமலை.
10 பண்ணாரி, ஈரோடு மாவட்டம் சிறுவர்-1, சிறுமியர்-1 அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயில், பண்ணாரி.
11 அழகர்கோயில், மதுரை மாவட்டம் சிறுமியர்-1 அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில்.
12 சோளிங்கர், வேலூர் மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்.
13 திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை.
14 சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்,சுவாமிமலை.
15 சேலம், சேலம் மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு சுகவனேசுவரர் திருக்கோயில், சேலம்.
16 தேக்கம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி.
17 அய்யம்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம் சிறுவர்-1, சிறுமியர்-1 அருள்மிகு வாழைத் தோட்டத்து அய்யன் திருக்கோயில், அய்யம்பாளையம்.
18 திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம் சிறுமியர்-1 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம்.
19 உப்பிலியப்பன் கோயில், தஞ்சாவூர் மாவட்டம் சிறுமியர்-1 அருள்மிகு வெங்கிடாசலபதி திருக்கோயில், உப்பிலியப்பன் கோயில்.
20 மாதவநல்லூர், கடலூர் மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மாதவநல்லூர்.
21 திருநாகேசுவரம், தஞ்சாவூர் மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேசுவரம்.
22 கொடுமுடி, ஈரோடு மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு மகுடேசுவரசுவாமி வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில்,கொடுமுடி.
23 ஈச்சநாரி, கோயம்புத்தூர் மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு விநயகர் திருக்கோயில், ஈச்சநாரி.
24 பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமியர்-1 அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர்.
25 ஆனைமலை, கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமியர்-1 அருள்மிகு மாசானியம்மன் திருக்கோயில், ஆனைமலை.
26 காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு கொப்புடைநாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி.
27 சிவன்மலை, ஈரோடு மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவன்மலை.
28 மடப்புரம், சிவகங்கை மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு அடைக்கலம்காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயில், மடப்புரம்.
29 திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம் சிறுமியர்-1 அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி.
30 சென்னை, சென்னை மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், சென்னை.
31 தாயமங்கலம், சிவகங்கை மாவட்டம் சிறுவர்-1 அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம்.
  • 31 கோயில்களின் நிர்வாகத்திலுள்ள 34 கருணை இல்லங்களில் சிறுவருக்கு 24 இல்லங்கள், சிறுமியருக்கு 10 இல்லங்கள் எனத் தனித்தனி இல்லங்கள் உள்ளன.
  • திருத்தணி, பழனி, பண்ணாரி ஆகிய இடங்களில் சிறுவர், சிறுமியர் என இருவருக்கும் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன.