தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் நாட்டில் இந்திய ஒன்றிய அரசினால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள், தமிழக அரசினால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் நடத்தி வரும் பொறியியல் கல்லூரிகள் என பல்வேறு வகையான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களின் வாரிசுகளும் சேர்ந்து கல்வி கற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவிடம் பொறியியல் கல்லூரிகள் நடத்துவதற்கான அனுமதியைப் பெற்று அந்தக் கல்லூரி அமைந்துள்ள மாவட்டங்களுக்கேற்ப கீழ்காணும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றிருக்கின்றன.

  1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
  2. அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
  3. அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
  4. அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி
  5. அண்ணா பல்கலைக்கழகம், மதுரை

பொறியியல் கல்லூரிகளின் வகைகள்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளை 4 வகைகளாகப் பிரிக்கலாம். அவை

  1. ஒன்றிய அரசு பொறியியல் கல்லூரிகள்
  2. அரசு பொறியியல் கல்லூரிகள்
  3. அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்
  4. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்

ஒன்றிய அரசு பொறியியல் கல்லூரிகள்[தொகு]

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் இப்பிரிவின் கீழ் வருகின்றன. தமிழ்நாட்டில் திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் முழுமையான பொறியியல் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. காரைக்குடி மின்வேதியியல் ஆய்வு நிறுவனம் நடத்தும் மின்வேதியியல் குறித்த பட்டப்படிப்பு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

அரசு பொறியியல் கல்லூரிகள்[தொகு]

மாநில அரசு நேரடியாகவோ அல்லது பல்கலைக்கழகங்கள் மூலமாகவோ நடத்தும் பொறியியல் கல்லூரிகள் அரசு பொறியியல் கல்லூரிகள் எனப்படுகிறது.

அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

அறக்கட்டளை அல்லது சங்கம் போன்ற தனியார் அமைப்பின் கீழ் நடைபெறும் சில கல்லூரிகள் அரசின் நிதியுதவியைப் பெற்று இயங்குகின்றன. இவை அனைத்தும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் எனப்படுகின்றன.

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

அறக்கட்டளை அல்லது சங்கம் போன்ற தனியார் அமைப்பின் நிர்வாகத்தில் நடைபெறும் சில கல்லூரிகள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் எனப்படுகின்றன.


அரசினர் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  1. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் திருச்சிராப்பள்ளி- அரியலூர் வளாகம்
  2. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் திருச்சிராப்பள்ளி- பண்ருட்டி வளாகம்
  3. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் திருச்சிராப்பள்ளி- இராமநாதபுரம் வளாகம்
  4. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் திருச்சிராப்பள்ளி-திருக்குவளை வளாகம்
  5. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் திருச்சிராப்பள்ளி- திண்டுக்கல் வளாகம்
  6. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் திருச்சிராப்பள்ளி- பட்டுக்கோட்டை வளாகம்

அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  1. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - சிதம்பரம்

சுயநிதி பொறியியல் கல்லூரிகள் (மாவட்ட வாரியாக)[தொகு]

கோயம்புத்தூர் மாவட்டம்[தொகு]

  1. நேரு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
  2. ஆதித்யா தொழில் நுட்பக் கழகம், கோயம்புத்தூர்
  3. சி.எம்.எஸ்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்
  4. அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்
  5. கதிர் பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
  6. குமரகுரு தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
  7. கலைவாணி தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
  8. கற்பகம் பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
  9. கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
  10. மகாராஜா தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
  11. ரங்கனாதன் பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
  12. ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
  13. ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
  14. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்
  15. ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி ,கோயம்புத்தூர்
  16. ஸ்ரீகுரு தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
  17. எஸ்.வி.எஸ். பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
  18. எஸ்.எஸ்.கே. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்
  19. எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
  20. எஸ்.என்.எஸ். தொழில் நுட்பக் கல்லூரி ,கோயம்புத்தூர்
  21. ஆர்.வி.எஸ். ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் ,கோயம்புத்தூர்
  22. பார்க் தொழில் நுட்பக் கல்லூரி ,கோயம்புத்தூர்
  23. பி.பி.ஜி. தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
  24. யுனைட்டட் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ,கோயம்புத்தூர்
  25. மகாராஜா பொறியியல் கல்லூரி, அவினாசி
  26. மகாராஜா பிரிதிவி பொறியியல் கல்லூரி, அவினாசி
  27. தமிழ் நாடு பொறியியல் கல்லூரி , கருமத்தம்பட்டி
  28. வி.எல்.பி.ஜானகி அம்மாள் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்
  29. டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி,பொள்ளாச்சி
  30. சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரி, குன்னூர்
  31. ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கழகம், திருப்பூர்
  32. அர்ஜுன் தொழில் நுட்பக் கல்லூரி செட்டியக்காபாளையம்

சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  1. ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சென்னை
  2. மாதா பொறியியல் கல்லூரி, சென்னை
  3. மாதா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கழகம், சென்னை
  4. கோபால் ராமலிங்கம் நினைவுப் பொறியியல் கல்லூரி, சென்னை
  5. தாகூர் பொறியியல் கல்லூரி
  6. தங்கவேலு பொறியியல் கல்லூரி
  7. வேலம்மாள் பொறியியல் கல்லூரி
  8. தனலெட்சுமி பொறியியல் கல்லூரி - சென்னை
  9. டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் - சென்னை
  10. ஈஸ்வரி பொறியியல் கல்லூரி - சென்னை
  11. பாரத் பல்கலைக்கழம்-சென்னை

திருவண்ணாமலை மாவட்டம்[தொகு]

  1. கம்பன் பொறியியல் கல்லூரி ,திருவண்ணாமலை
  2. அருணை பொறியியல் கல்லூரி - திருவண்ணாமலை
  3. கம்பன் பொறியியல் கல்லூரி ,திருவண்ணாமலை
  4. ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரி ,திருவண்ணாமலை
  5. எஸ்.கே.பி.பொறியியல் கல்லூரி ,திருவண்ணாமலை
  6. எஸ்.கே.பி.தொழில் நுட்பக்கழகம் ,திருவண்ணாமலை
  7. அருள்மிகு மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரி ,[[]]
  8. ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி - கலவை
  9. கே.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி,வந்தவாசி
  10. திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி,வந்தவாசி
  11. ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி,ஆரணி
  12. பல்கலை கழகப் பொறியியல் கல்லூரி, ஆரணி
  13. அண்ணாமலையார் பொறியியல் கல்லூரி ,போளூர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்[தொகு]

  1. வெற்றி வினாயகா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி
  2. சாரனாதன் பொறியியல் கல்லூரி,பஞ்சப்பூர் ,திருச்சி
  3. ஆக்ஃஸ்போர்ட் பொறியியல் கல்லூரி, திருச்சி
  4. ஷிவானி பொறியியல் கல்லூரி, திருச்சி
  5. ஷிவானி தொழில் நுட்பக் கழகம், திருச்சி
  6. திருச்சி பொறியியல் கல்லூரி, கொணலை, திருச்சி

கரூர் மாவட்டம்[தொகு]

  1. செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, புலியூர், கரூர்
  2. கரூர் பொறியியல் கல்லூரி.கரூர்
  3. எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கரூர்
  4. வி.கே.எஸ்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, கரூர்
  5. வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி, காருடையாம்பாளையம், கரூர்

ஈரோடு மாவட்டம்[தொகு]

  1. அல்-அமீன் பொறியியல் கல்லூரி - ஈரோடு
  2. பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கழகம்- ஈரோடு
  3. அல்-அமீன் பொறியியல் கல்லூரி - ஈரோடு
  4. சூர்யா பொறியியல் கல்லூரி, ஈரோடு
  5. நந்தா தொழில் நுட்பக் கல்லூரி, ஈரோடு
  6. நந்தா பொறியியல் கல்லூரி, பெருந்துறை

நாமக்கல் மாவட்டம்[தொகு]

  1. செல்வம் தொழில் நுட்பக் கல்லூரி, நாமக்கல்
  2. ஞானமணி பொறியியல் கல்லூரி, நாமக்கல்
  3. ஞானமணி தொழில் நுட்பக் கல்லூரி, நாமக்கல்
  4. செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு
  5. செங்குந்தர் மகளிர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு

சேலம் மாவட்டம்[தொகு]

  1. சோனா தொழில் நுட்பக் கல்லூரி, சேலம்
  2. ஏ.வி.எஸ்.பொறியியல் கல்லூரி, சேலம்

தஞ்சாவூர் மாவட்டம்[தொகு]

  1. அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி ,திருவாரூர்
  2. எ.வி .சி. பொறியியல் கல்லூரி,மயிலாடுதுறை
  3. எ.ஆர்.ஜே. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி., மன்னார்குடி
  4. அன்னை பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி., தஞ்சாவூர்
  5. வாண்டையார் பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர்
  6. அஸ்-சலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி., தஞ்சாவூர்
  7. அரசு பொறியியல் கல்லூரி, கும்பகோணம்

அரியலூர் மாவட்டம்[தொகு]

  1. மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி - தத்தனூர்- 621804 * அலைபேசி: 9366666800

பெரம்பலூர் மாவட்டம்[தொகு]

  1. ரோவர் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர்
  2. ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பெரம்பலூர்
  3. ஸ்ரீநிவாசன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர்
  4. தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர்

விழுப்புரம் மாவட்டம்[தொகு]

  1. ஏ.ஆர்.பொறியியல் கல்லூரி விழுப்புரம்
  2. ஈ.எஸ்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி விழுப்புரம்
  3. ஐ.எப்.ஈ.டி.பொறியியல் கல்லூரி விழுப்புரம்
  4. இதயா மகளிர் பொறியியல் கல்லூரி விழுப்புரம்
  5. ஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லூரி விழுப்புரம்
  6. டி.எஸ்.எம். தொழில்நுட்பக் கல்லூரி விழுப்புரம்
  7. ஏ.கே.டி.நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.கள்ளக்குறிச்சி
  8. மகாபாரதி பொறியியல் கல்லூரி.கள்ளக்குறிச்சி
  9. அன்னை தெரசா பொறியியல் கல்லூரி.,உளுந்தூர்பேட்டை
  10. வி.ஆர்.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,உளுந்தூர்பேட்டை
  11. மயிலம் பொறியியல் கல்லூரி, திண்டிவனம்
  12. ஸ்ரீ அரவிந்தர் பொறியியல் கல்லூரி,வானூர்
  13. சூர்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விக்கிரவாண்டி

விருதுநகர் மாவட்டம்[தொகு]

கடலூர் மாவட்டம்[தொகு]

  1. டாக்டர் நெடுஞ்செழியன் பொறியயல் கல்லூரி, கடலூர்
  2. கிருஷ்ணசாமி பொறியயல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கடலூர்
  3. எம்.ஆர்.கே.தொழில்நுட்பக் கழகம், கடலூர்
  4. ஸ்ரீ ஜெயராம் பொறியயல் கல்லூரி, கடலூர்
  5. செயின்ட் அன்னிஸ் பொறியயல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,பண்ருட்டி

தர்மபுரி மாவட்டம்[தொகு]

  1. ஸ்ரீனிவாசா பொறியியல் கல்லூரி,தர்மபுரி
  2. ஜெயம் பொறியியல் கல்லூரி,தர்மபுரி
  3. வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி,தர்மபுரி
  4. ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி,தர்மபுரி
  5. சப்தகிரி பொறியியல் கல்லூரி,தர்மபுரி

பிற[தொகு]

  1. பாரதிதாசன் பொறியியல் கல்லூரி - திருப்பத்தூர்
  2. எக்செல் பொறியியல் கல்லூரி -குமாரபாளையம்
  3. கோயம்புத்தூர் தொழில் நுட்பக் கழகம்- கோயம்புத்தூர்

இணைப்பு பல்கலைக்கழகம் வாரியாக பட்டியல்கள்[தொகு]