தமிழ்நாட்டின் துணை முதல்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு முதலமைச்சர் பதவிக்கு அடுத்த நிலையில் துணை முதல்வர் பதவியானது  அறிவிக்கப்பட்டுள்ளது.  துணை முதல்வர் பதவி வகித்த முதல் நபர் மு.க. ஸ்டாலின் ஆவார். இவர் மே 29, 2009 அன்று முதல் மே 15, 2011 அன்று வரை பதவி வகித்தார். அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் மு. கருணாநிதி ஆவார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி, 2009 ல் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், அது முதல் அவருக்கு சக்கர நாற்காலி தரப்பட்டது. அவரது உடல்நிலை காரணமாக அவரது துறைகளில் இருந்து பல துறைகளில் கவனம் செலுத்த முடியவில்லை, எனவே அவரது மகனான மு.க. ஸ்டாலின் மீது சில துறைகள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்தார், அவர் அமைச்சரவையில் உள்ளூர் நிர்வாக அமைச்சராக பதவி வகித்தார்.  இதன் விளைவாக தமிழ்நாட்டில் முதல் முறையாக துணை முதலமைச்சர் பதவி உருவானது. ஆனால் கருணாநிதி உள்துறைப் பொறுப்பை மட்டும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]