தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்1971
வேந்தர்ஆர். என். ரவி[1]
துணை வேந்தர்வி. கீதாலட்சுமி[2]
மாணவர்கள்7500 scientists(Ph.D.,)= 1400
அமைவிடம், ,
சேர்ப்புஇந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்
இணையதளம்www.tnau.ac.in

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1868 ஆம் ஆண்டில் சென்னை சைதாபேட்டையில் ஒரு வேளாண்மைப் பள்ளியாக நிறுவிதிரிருந்து இது தோற்றம் பெற்றது. பின்னர் நிர்வாக காரணங்களுக்காக 1906 இல் கோயம்புத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. லாசி சாலையில் வடிவில் கட்டடம் கட்டபட்டது.

1920 இல், இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் முழுப் பொறுப்புகளையும் இந்தப் பல்கலைக் கழகம் ஏற்றுக்கொண்டது. மேலும் ஆராய்ச்சிகள் மூலம் மாநில வேளாண் துறைக்கு ஆதரவளித்தது.

உறுப்புக் கல்லூரிகள்[தொகு]

இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்புக் கல்லூரிகள்.[3]

No. பெயர் இருப்பிடம் மாவட்டம் நிறுவப்பட்ட ஆண்டு பிரிவு நிலை
1 வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 1908 வேளாண்மை பட்டப்படிப்பு பல்கலைக்கழக வளாகம்
2 முதுகலை கல்விப் பள்ளி, கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 1965 வேளாண்மை பட்டப்படிப்பு பல்கலைக்கழக வளாகம்
3 வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், மதுரை மதுரை மதுரை 1965 வேளாண்மை பட்டப்படிப்பு பல்கலைக்கழக வளாகம்
4 அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், நாவலூர் குட்டப்பட்டு திருச்சிராப்பள்ளி 1989 வேளாண்மை பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
5 வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், கிள்ளிகுளம் கிள்ளிகுளம், வல்லநாடு தூத்துக்குடி 1985 வேளாண்மை பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
6 வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், குமுளூர் குமுளூர், லால்குடி திருச்சிராப்பள்ளி 1992 வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
7 வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 1972 வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
8 தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 1972 தோட்டக்கலை பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
9 தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், பெரியகுளம் பெரியகுளம் தேனி 1990 தோட்டக்கலை பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
10 மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், திருச்சிராப்பள்ளி நாவலூர் குட்டப்பட்டு திருச்சிராப்பள்ளி 2012 தோட்டக்கலை பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
11 வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் 1990 வனக்கல்லூரி பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
12 மனையியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், மதுரை மதுரை மதுரை 2000 மனையியல் பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
13 வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், தஞ்சாவூர் Eachankottai தஞ்சாவூர் 2014 வேளாண்மை பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
14 வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், திருவண்ணாமலை வலவச்சனூர் திருவண்ணாமலை 2014 வேளாண்மை பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
15 வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், குடுமியான்மலை குடுமியான் மலை புதுக்கோட்டை 2014 வேளாண்மை பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
16 வேளாண்மை கல்வி நிறுவனம், குமுளுர் குமுளுர் திருச்சி 2016 வேளாண்மை பட்டப்படிப்பு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி

வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர் திருச்சிராப்பள்ளி[தொகு]

வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர், திருச்சிராப்பள்ளி.

வேளாண்மை கல்வி நிறுவனம் 2016 ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேளாண்மை பட்டயப் படிப்பு கல்வி நிறுவனம் அனைத்தையும் ஒன்றாகக் இனைத்து குமுளுரில்  தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 500 மாணவர்கள் பயில்கின்றனர். 25 கி.மீ தொலைவில் திருச்சி மாநகரம் உள்ளது.7 கி.மீ தொலைவில் லால்குடி நகரம் உள்ளது.

கல்லூரி ஆய்வகம்

1. மண்ணியல் ஆய்வகம்.

2. பூச்சியியல் ஆய்வகம்

3.நோயியல் ஆய்வகம்

4.உழவியல் ஆய்வகம்

5.நூண்ணூயிரியல் ஆய்வகம்

6.தாவர இனப்பெருக்கவியல்ஆய்வகம்

7 . விதையியல் ஆய்வகம்

  • மாணவர்கள் தங்கி பயில ஆண்கள்/ பெண்கள் இருபலருக்கும் விடுதி வசதி உள்ளது.
  • மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்வதற்கு ஏதுவாக 4 பேருந்துகள் மற்றும் ஒரு A/C பேருந்து உள்ளது.
  • காலை 9 மணி முதல் 5 மணி வரை மாணவர்கள் சிற்றுண்டி சாலை அமைந்துள்ளது.

தனியார்/ இணைவு கல்லூரிகள்[தொகு]

  1. ரோவர் வேளாண்மை கல்லூரி, பெரம்பலூர்
  2. ஆதிபராசக்தி வேளாண்மைக்கல்லூரி, கலவை
  3. CAT தேனி
  4. வானவராயர் வேளாண்மைக்கல்லூரி, கோயம்புத்தூர்

பல்கலைக்கழக ஆராய்ச்சி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. http://www.tnrajbhavan.gov.in/PressReleases/2022/PR280322-1.pdf
  3. "Tamil Nadu Agricultural University :: Colleges". tnau.ac.in. 2012 [last update]. Archived from the original on 22 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012. {{cite web}}: Check date values in: |year= (help)