தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் திடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் திடல்
முழு பெயர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் திடல்
இடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு
எழும்பச்செயல் ஆரம்பம் 1965
திறவு 1965
உரிமையாளர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
ஆளுனர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 5,000

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் திடல் (Tamil Nadu Agricultural University Ground), தமிழ்நாட்டின் கோயம்புத்துாரிலுள்ள பல்நோக்கு அரங்கமாகும். இந்த அரங்கம் முக்கியமாக காற்பந்தாட்டம், துடுப்பாட்டம், மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைக்கப் பயன்படுகிறது. 1965 ஆம் ஆண்டு ஆந்திர துடுப்பாட்ட அணிக்கு எதிராக மதராஸ் அணி விளையாடிய போட்டி,[1][2] 1976ஆம் ஆண்டு தமிழ்நாடு துடுப்பாட்ட அணி, ஆந்திர துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய போட்டி[3]; 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு துடுப்பாட்ட அணி கர்நாடக துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய போட்டி[4] என இந்த அரங்கில் மூன்று ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. அப்பொழுதிருந்து, இந்த அரங்கில் முதல் வகுப்பல்லாத போட்டிகள் நடைபெறுகின்றன.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]