உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
வகைபொதுவுடைமை நிறுவனம்
முந்தியதுதமிழ்நாடு மின்சார வாரியம்
நிறுவுகைநவம்பர் 1, 2010 (2010-11-01)
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
முதன்மை நபர்கள்திரு.விக்ரம் கபூர் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர்
தொழில்துறைமின்சாரம்
உற்பத்திகள்மின்சார உற்பத்தி
சேவைகள்மின் பகிர்மானம்
உரிமையாளர்கள்தமிழ்நாடு அரசு
தாய் நிறுவனம்தமிழ்நாடு மின்சார வாரியம்
இணையத்தளம்www.tangedco.gov.in//

தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1-ஆம் தேதி மின்சாரம் (வழங்கல்) சட்டம் 1948 பிரிவு 54-இன் கீழ் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மானப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிறுவனமாக இயங்கி வந்தது. திருத்தியமைக்கப்பட்ட மின்சார வழங்கல் சட்டம் 2003ம் ஆண்டு சட்ட பிரிவு 131ன் படி மாநில மின்சார வாரியங்கள் பிரிக்கப்பட வேண்டியதாகும். அதன்படி தமிழ்நாடு அரசின் கொள்கை எண்.114 எரிசக்தி (பி.2) படி இரண்டு துணை நிறுவனங்கள் அதாவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம (TANGEDCO), தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் என்ற உடைமை நிறுவனம் என மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய இம்மூன்று நிறுவனங்களுமே தமிழ்நாட்டு அரசுகக்கு முழுமையாக சொந்தமானவையாகும். தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. 01 நவம்பர் 2010ம் ஆண்டு முதல் இந்நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.[1]

நிறுவனத்தின் நோக்கம்[தொகு]

"தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என்றால்  தரமான மற்றும் தடையில்லா மின்சாரம் மலிவான விலையில்  நுகர்வோர்க்கு வழங்குவது என்பதனை பொருளாக்கிட" - என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

மின் உற்பத்தி[தொகு]

நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பல்வேறு மரபுசார்ந்த அனல், புனல்((நீர்)), காற்று, அணு மற்றும் சூரிய ஒளிஆற்றலைக் கொண்டு  மாநில, மத்திய மற்றும் தனியார் மின் உற்பத்தி திட்டங்களுடன் கிட்டத்தட்ட 13,231.44 மெகாவாட் அளவிற்கு மின் நிறுவு திறனை பெற்றுள்ளது.

இவைத் தவிர, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக்கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் சுமாராக 8470.16 மெகாவாட் அளவு மின் நிறுவுதிறன் கொன்டுள்ளது.

மரபுசார் மின் தயாரிப்பு[தொகு]

தமிழகத்தில் 10வது ஐந்தாண்டு திட்டத்திலேயே நீர் மூலம் மின் சக்தி பெறுவதற்கான மின் நிலையங்கள் முழுவதுமாக நிறுவப்பட்டுவிட்டன. இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின் தேவைக்கும், தயாரிக்கப்படும் மின் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்ந்து வரும் இடைவெளியை குறைக்கும் பொருட்டு இந்நிறுவனம் பல்வேறு புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உச்சநேர மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1200 மெகாவாட் திறன் கொண்ட 3 நீரேற்று புனல் மின் நிலையங்கள் குந்தா, மேட்டூர் மற்றும் வெள்ளிமலையில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள ஆற்றின் குறுக்கே சிறு புனல் மின் திட்டத்தின் கீழ் (25 மெகாவாட்டுக்கு கீழ்) சுமார் 110 மெகாவாட் திறன் கொண்ட சிறுபுனல் மின்நிலையங்கள் நிறுவப்பட்டு மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

அனல் மின் நிலையங்கள்[தொகு]

நீர் மின் நிலையங்கள்[தொகு]

மரபுசாரா மின் உற்பத்தி[தொகு]

மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள் பயன்படுத்தும் முன்னிலை நாடுகளில் இந்தியா நான்காவது நாடாக விளங்குகிறது. மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிப்பதில் இந்தியாவிலுள்ள மற்ற மாநில மின்சார வாரியங்களை விட தமிழ்நாடு மின்சார வாரியம் தான் முன்னோடியாக விளங்குகிறது.

காற்றாலை மின்னுற்பத்தி[தொகு]

தமிழ்நாடுமின்சார வாரியம் முதன்முதலாக 50KW மின் காற்றாலையை ஜனவரி 1986ல் நிறுவியது. 1986 முதல் 1993 வரை காலத்தில் 19.35 மெகாவாட்டிற்கு மாதிரி மின்காற்றாலைகளை தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக அமைத்தது.

 • கயத்தாறு காற்றாலை மின்னுற்பத்தி (திருநெல்வேலி மாவட்டம்)
 • ஆரல்வாய்மொழி காற்றாலை மின்னுற்பத்தி (கன்னியாகுமரி மாவட்டம்)
  காற்றாலை.
 • தேனி மாவட்டக் காற்றாலை மின்னுற்பத்தி (தேனி மாவட்டம்)
 • பாலக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்

காற்றாலை மட்டுமல்லாது

 • தாவரசக்தி மூலம்
 • திடக்கழிவுகளில் இருந்து
 • சூரிய ஓளி மூலம் மற்றும்
 • சர்க்கரை ஆலைக்கழிவுகளில் இருந்து இணை மின்சாரம் என பல்வேறு முறைகளில் இந்நிறுவனத்தால் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

அணு மின் நிலையங்கள்[தொகு]

 • கல்பாக்கம் அணு மின் நிலையம்
 • கூடங்குளம் அணு மின் நிலையம்
Kudankulam Nuclear Power Plant in 2014

மின் பகிர்மானம்[தொகு]

மின்பகிர்மான கட்டமைப்பு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை திறம்பட பயன்படுத்த இன்றியமையாத ஒன்றாகும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சிறந்த மின் பகிர்மான கட்டமைப்பை பெற்று திகழ்கின்றது. 1957 முதல் பெற்ற வளர்ச்சி மின்பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 4.3 இலட்சத்தில் இருந்து 279.27இலட்சம் ஆகும். மின்பகிர்மான மாற்றிகள் 3773 எண்ணிக்கையிலிருந்து 2,82,028 எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது. தாழ்வழுத்த மின் கம்பிகள் 13,055 கிலோ மீட்டரில் இருந்து 6.19 இலட்ச கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. உச்சகட்ட மின்தேவை 172 மெகாவாட்டிலிருந்து 15,343 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தனிநபர் மின்நுகர்வு 21 யூனிட்டிலிருந்து 1340 யூனிட்டாக உயர்ந்துள்ளது.

தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா(ராஜீவ் காந்தி கிராமப்புற மின்மயமாக்கல் திட்டம்)[தொகு]

ராஜீவ் காந்தி கிராமப்புற மின்மயமாக்கல் திட்டம் மத்திய அரசால் 2005ம் ஆண்டு கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கத் தேவையான கட்டுமானங்கள் அமைக்கும் திட்டமாகும். தமிழ்நாட்டில் இத்திட்டம் முதல் கட்டமாக 26 மாவட்டங்களில் டிசம்பர் 2010ம் ஆண்டு முடிக்கப்பட்டு 10129 எண்ணிக்கையில் 35/16 கிலோவாட் மின்மாற்றிகளும் 13296 கிலோ மீட்டர் அளவிற்கு தாழ்வழுத்த கம்பிகளும் நிறுவப்பட்டு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான வறுமைக்கோட்டிற்கு கீழான மக்களின் வீடிகளுக்கு மின்னிணைப்பு இந்நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டம் தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா என மத்திய அரசால் 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாற்றப்பட்டு இரண்டாம் கட்டமாக நீலகிரி, தருமபுரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு 2017ம் ஆண்டு டிசம்பரில் முடிந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. "மின்சார வாரிய சீரமைப்பு" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
 2. "ஊரக மின்மயமாக்கல்" (PDF). Archived from the original (PDF) on 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)