தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம் முதலில் சென்னை மாகாண அரசு ஆணை எண் 4317, பொ.ப.து. நாள்:16-11-55 வழியாக நிறுவப்பட்டது. இந்த வாரியத்தின் வழியாக மின்சாரப் பணிகளை மேற்கொள்ளும் மின்சாரப் பணியாளர்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் அனுபவத்தினைக் கொண்டு உதவியாளர்,கம்பியாளர், மேற்பார்வையாளர் தகுதிக்கான சான்றிதழ்களையும், ஒப்பந்தப் பணிகளுக்கான உரிமங்களையும் அளிக்கிறது.

வழங்கப்பட்ட மின் உரிமங்கள்[தொகு]

தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம் 28-02-2002 வரை மின்சாரப் பணிகளுக்கான சான்றிதழ்களையும், உரிமங்களை கீழ்காணும் பட்டியலிலுள்ளபடி வழங்கியிருப்பதாக [1] தெரிவித்துள்ளது.

தகுதிச் சான்றிதழ்கள்[தொகு]

மின் உரிமம் வழங்கும் வாரியம் மேற்பார்வையாளர், கம்பியாளர், கம்பியாள் உதவியாளர் மற்றும் மின் உற்பத்தி இயக்குபவர்களுக்கான தகுதிக்குரிய சான்றிதழ்களை கீழ்காணும் எண்ணிக்கையில் அளித்துள்ளது.

சான்றிதழ் நிலை
மற்றும் எண்ணிக்கை
  • மேற்பார்வையாளர் தகுதி - 27925
  • கம்பியாளர் தகுதி - 83086
  • கம்பியாள் உதவியாளர் தகுதி - 14884
  • மின் உற்பத்தி இயக்குபவர் - 297

மின் உரிமங்கள்[தொகு]

மின் உரிமம் வழங்கும் வாரியம் மின்சாரப்பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தகுதிக்குரிய உரிமங்களை கீழ்காணும் எண்ணிக்கையில் அளித்துள்ளது.

உரிமம் நிலை
மற்றும் எண்ணிக்கை
  • ஈ.எஸ்.ஏ - 116
  • ஈ.ஏ - 1086
  • ஈ.எஸ்.பி - 1012
  • ஈ.பி - 12147

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மின் உரிமம் வழங்கும் வாரியத்தின் இணையதளக் குறிப்பு