தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ்நாடு மாநிலத் தேர்தல், 2006 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006

← 2001 மே 8, 2006 2011 →

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
  First party Second party Third party
 
தலைவர் மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா விஜயகாந்த்
கட்சி திமுக அதிமுக தேமுதிக
கூட்டணி ஜமுக ஜமக -
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சேப்பாக்கம் ஆண்டிப்பட்டி விருத்தாசலம்
வென்ற
தொகுதிகள்
163 69 1
மாற்றம் 126 127
மொத்த வாக்குகள் 1,47,62,647 1,31,66,445 27,64,223
விழுக்காடு 44.75% 39.91% 8.38%


முந்தைய தமிழ்நாட்டு முதல்வர்

ஜெ. ஜெயலலிதா
அதிமுக

தமிழ்நாட்டு முதல்வர்

மு. கருணாநிதி
திமுக

தமிழ் நாடு வரைபடம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் அதன் கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் திமுக அரசு மே 13-ம் தேதி மு. கருணாநிதி அவர்கள் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.[1]

பின்புலம்[தொகு]

கூட்டணி / கட்சிகள்[தொகு]

ஜனநாயக மக்கள் கூட்டணி[தொகு]

  கட்சி தொகுதி
அதிமுக 182
மதிமுக 35
கோவில் மணி சின்னம் விசிக 9
இதேலீ 2
இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரஸ் 2
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு) 1
மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1
ஃபார்வேட் பிளாக் (சந்தானம்) 1
ஜதம 1

தேர்தல் முடிவுகள்[தொகு]

2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்[2]
கூட்டணி கட்சி போட்டியிட்ட
தொகுதிகள்
வென்ற
தொகுதிகள்
வைப்புத் தொகை
இழப்பு
வைப்புத் தொகை
இழக்காத,
வெற்றி பெற்ற
தொகுதிகளில்

வாக்கு சதவீதம்
போட்டியிட்ட அனைத்து
தொகுதிகளில் மொத்த

வாக்கு சதவீதம்
ஜனநாயக
முற்போக்குக் கூட்டணி
– 163
திராவிட முன்னேற்றக் கழகம் 132 96 0 26.46 45.99
இந்திய தேசிய காங்கிரஸ் 48 34 0 8.38 43.50
பாட்டாளி மக்கள் கட்சி 31 18 0 5.65 43.43
இந்திய பொதுவுடமைக் கட்சி (CPI) 10 6 0 1.61 40.35
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (சிபிஎம்) 13 9 0 2.65 42.65
ஜனநாயக மக்கள் கூட்டணி-69 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 188 61 3 32.64 40.81
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 35 6 0 5.98 37.70
விடுதலைச் சிறுத்தைகள் 9 2 0 1.29 36.09
தனித்துப்
போட்டியிட்ட
கட்சிகள்
மற்றும் சுயேச்சைகள்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 232 1 223 8.38 8.45
சுயேச்சை 1222 1 1217
பிற 2

தகவல்: http://www.bbc.co.uk/tamil/news/story/2006/05/060511_tnelection.shtml

போட்டியிட்ட கட்சிகள்[தொகு]

இவற்றையும் பார்க்க: பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்

அரசியல் நிலவரம்[தொகு]

  • ஜெயலலிதா வெற்றி பெற்றவுடன் முதலமைச்சர் பதவியை ஏற்க முடியாமல் அவர் ஊழல் வழக்கில் சிறை சென்றது மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலையை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.[சான்று தேவை]
  • ஜெயலலிதாவின் கைது நடவடிக்கை எதிர்த்து தமிழ்நாட்டில் பல வன்முறை செயல்கள் நடந்தேறிய நிகழ்வில் தர்மபுரியில் ஒரு கல்லூரி மகளிர் பேருந்து எரிக்கப்பட்டது.
  • அதே போல் அதிமுக கட்சியின் தலைமையும் அக்கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் சர்வதிகார புடைப்புடன் இருந்ததால். மக்களிடையே அதிக எதிர்ப்பு அலைகளை உருவாக்கி இருந்தது.
  • மேலும் கடந்த ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் 2001 முதல் 2004 வரையிலான ஆட்சியில் மிகவும் கடுமையாகவும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாத திட்டங்களை அறிவித்த போதிலும் கொடுங்கோள் ஆட்சி முறை என்று மக்களிடமும் எதிர்கட்சி தலைவர்களிடமும் பலமான எதிர்ப்பு நிலையில் இருந்ததால் 2004 நாடாளமன்றத் தேர்தலில் தனக்கு முழுமையான தோல்வி அடைந்ததால். மக்களிடையே மீண்டும் பெரும் செல்வாக்கை உருவாக்கி கொள்ள 2005 முதல் 2006 வரையிலான கடைசி இரண்டு வருட ‌ஆட்சி காலத்தில் மக்களுக்கு பல நன்மையான திட்டங்களை செய்து இந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 69 இடங்களை கைப்பற்றினார். பலமான எதிர்கட்சியாகச் செயல்பட்டார்.
  • மேலும் ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் அதிகார மீறல் செயல்களான பெரும் அரசியல் தலைவர்களான எதிர்கட்சி திமுக தலைவர் கருணாநிதி அவர்களை மேம்பாலம் கட்டிய ஊழல் வழக்கில் கைது செய்தது. மதிமுக தலைவர் வைகோ அவர்களை விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதால் அவரை பொடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் தொண்டர்களிடமும், வாக்காளர்களிடமும் பெரும் எதிர்ப்பு நிலையை ஏற்படுத்தியது.
  • மிசா, பொடா, தடா போன்ற மிகவும் கடுமையான சட்டங்களால் அன்றைய மத்திய பாஜக பிரதமர் வாஜ்பாய் அரசையும் அதனுடன் தமிழக கூட்டணி கட்சியான திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களையும் எதிர்த்து ஜெயலலிதா வழி நடத்தி சென்றார்.
  • மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல்
  • லாட்டரி டிக்கெட் தடை செய்யப்பட்டது
  • ஆழிப் பேரலை, அடைமழை-வெள்ளப்பெருக்கு நிவாரண பிரச்சினைகள்
  • குடிநீர் பிரச்சினை
  • சூழல் மாசுறுதல்
  • ஏழ்மை நிவாராண மத்திய வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டு தேவைகள் நிறைவேற்றப்படவில்லை
  • மத்திய மாநில அரசு உறவு பிரச்சனைகள்

மனித உரிமை பிரச்சினைகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. 2006 சட்டமன்ற தேர்தல்: தி.மு.கவின் முதல் 'மைனாரிட்டி' அரசு அமைந்தது எப்படி?
  2. "2006 to the Legislative Assembly of TAMILNADU" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.

வெளி இணைப்புகள்[தொகு]