தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) என்பது மேலாண்மைக் கல்வி, கணினிப் பயன்பாடுகள் மற்றும் பொறியியல் படிப்புகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ஒரு நுழைவுத் தேர்வாகும். இத்தேர்வுகளை ஆண்டுதோறும் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இத்தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள இக்கல்விகளுக்கான படிப்புகளைக் கொண்ட எந்தக் கல்லூரிகளிலும் சேர முடியும். தமிழ்நாட்டிலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற தேர்வுகளைத் தனித்தனியாக நடத்துகின்றன.