தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (Tamilnadu Industrial Cooperative Bank Ltd., ) இதனை சுருக்கமாக தாய்கோ வங்கி (“TAICO Bank”) என்று அழைப்பர். இந்தியாவின் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான தாய்கோ வங்கி, தொழிற்கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்காக நிதி வசதிகள் வழங்க துவக்கப்பட்டது. தமிழ்நாடு மாநிலத்தில் மட்டும் செயல்படும் இவ்வங்கி நாற்பத்து நான்கு கிளைகள் கொண்டது. [1]

தமிழ்நாட்டில் ஆரம்ப தொழிற் கூட்டுறவு சங்கங்களின் மேம்பாட்டிற்காக நிதி வசதிகள் வழங்க தனியாக ஒரு வங்கி நிறுவனம் வேண்டியதின் அவசியத்தை கருதி, மெட்ராஸ் மாகாண தொழிற் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் 13 செப்டம்பர் 1961-ஆம் ஆண்டில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1961-இன் படி பதிவு செய்யப்பட்டது. பின்னர் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு இவ்வங்கி மூலதனத்தில் பெரும் தொகை முதலீடு செய்துள்ளது. இவ்வங்கி தொழில் மற்றும் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இவ்வங்கியின் தலைமையகம் சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் எதிரில் அமைந்த சென்னை பெருநகர வளர்ச்சி முகமையின் வளாகத்தில் தரை தளத்தில் இயங்குகிறது.

நோக்கம்[தொகு]

தமிழ்நாடு அரசின் தொழில் & வணிக ஆணையாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொழிற் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான தொழில் மேம்பாட்டுக் கடன் வசதிகள் அளிப்பதே தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் முக்கிய நோக்கமாகும்.

வழங்கும் பிற சேவைகள்[தொகு]

  1. பொதுத்துறை, அரசு நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வைப்பு நிதிகள் பெறுதல்.
  2. தொழிற் கூட்டுறவு சங்கங்கங்களுக்கு கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்குதல்
  3. பொதுமக்களுக்கு நகைக் கடன் மற்றும் இதர கடன் வசதிகள் வழங்குதல்
  4. பாதுகாப்பு பெட்டக வசதிகள்.
  5. வங்கி வரைவோலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வங்கி கியாரண்டி வழங்குதல்
  6. தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுமக்களுக்கு காப்பீட்டு சேவைகள் வழங்குதல்
  7. தொழிற்கூட்டுறவு சங்கங்களுக்கு ஆலோசனைகள் வழங்குதல்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]