தமிழ்நாடு தொழிலக வெடிபொருள் உற்பத்தி நிறுவனம்
தோற்றம்
| வகை | அரசு பொதுத்துறை நிறுவனம் |
|---|---|
| தலைமையகம் | கிறிஸ்டியன்பேட்டை, வேலூர்-632059, தமிழ்நாடு, இந்தியா |
| சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு |
| முதன்மை நபர்கள் | தலைவர் & மேலாண்மை இயக்குநர் (இஆப) |
| தொழில்துறை | தொழிலக வெடி பொருட்கள் மற்றும் அதன் தொடர்பானவைகள் |
| இணையத்தளம் | https://www.tn.gov.in/rti/proactive/ind/handbook_TEL.pdf |
தமிழ்நாடு தொழிலக வெடி பொருட்கள் நிறுவனம் (Tamil Nadu Industrial Explosives Limited (சுருக்கமாக:TEL) என்பது தமிழ்நாடு அரசு நிறுவனங்களில் ஒன்றாகும்[1] இந்நிறுவனம் தொழிலக வெடி பொருட்களையும், அதனைச் சார்ந்த பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.[2] இந்நிறுவனத்தின் ஆலை வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள வண்டாரந்தாங்கல் மற்றும் தாராபடவேடு பகுதிகளில் 700 ஏக்கர் பரப்பளவில் செயல்படுகிறது. இதன் ஆலை காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிறுவனம் 1983ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவாலையின் உள்ளூர் தலமையிடம் வேலூர், கிறிஸ்டியன்பேட்டையிலும், தலைமையகம் சென்னை-600002ல் செயல்படுகிறது.
உற்பத்திகள்
[தொகு]- டெட்டர்கள் (Detators)
- டெட்டர் பியூஸ்
- குழம்பு வெடிபொருட்கள்
- சாந்து வெடிபொருட்கள்
- MMAN அடிபடையிலான வெடிபொருட்கள்
- 2EHN
சில பெரிய வாடிக்கையாளர்கள்
[தொகு]- இந்தியா நிலக்கரி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள்
- சிங்கரேணி நிலக்கரிச் சுரங்க நிறுவனம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு