தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்
தோற்றம்
| வகை | பொது (BSE, NSE) |
|---|---|
| நிறுவுகை | 1979 |
| தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| முதன்மை நபர்கள் |
|
| தொழில்துறை | கரும்புச் சக்கை அடிப்படை காகித ஆலை |
| நிகர வருமானம் | ₹ 1025.68 கோடி in 2009-10[1] |
| உரிமையாளர்கள் | தமிழ்நாடு அரசு |
| தாய் நிறுவனம் | தொழிற்துறை (தமிழ்நாடு) |
| இணையத்தளம் | www |

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL)[2] என்பது தமிழ்நாடு அரசால் 1999ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.[3] இந்த நிறுவனம் செய்தித்தாள் மற்றும் எழுத்து வகை காகிதங்களை கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கிறது. தமிழ்நாடு அரசு ஏப்ரல் 1979-ஆம் ஆண்டு இக்காகித ஆலையை உலகின் சுற்றுச்சூழலுக்கு மிகவும் இணக்கமான காகித ஆலைகளில் ஒன்றாக நிறுவனங்கள் சட்டம் 1956-இன் கீழ் பட்டியலிட்டுள்ளது. கரூர் மாவட்டம், புகழூர் காகிதபுரம் (புவியியல் ஆள்கூறுகள் - 11°02′56″N 77°59′52″E / 11.0488°N 77.9977°E) மற்றும் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதன் தலைமை அலுவலகம் சென்னை கிண்டியில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ TNPL's Press Release (20 May 2010). "Total Revenue_Press Release" (PDF). Archived from the original (PDF) on 17 சூலை 2011. Retrieved 29 சூன் 2010.
- ↑ Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL). "TNPL's Official Website". Retrieved 29 June 2010.
- ↑ Govt of Tamil Nadu's Official Website indicating TNPL (TNPL). "Govt of Tamil Nadu Subsidy". Retrieved 29 June 2010.