தமிழ்நாடு சர்க்கரைக் கழகம்
Appearance
வகை | தமிழ்நாடு அரசு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1974 |
தலைமையகம் | ஆவின் இல்லம் முதல் தளம்,3A பசும்பொன் முத்து ராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை - 600 035, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு |
தொழில்துறை | [சர்க்கரை உற்பத்தி] |
இணையத்தளம் | [1] |
தமிழ் நாடு சர்க்கரைக் கழகம் (Tamil Nadu Sugar Corporation Limited-TASCO) என்பது இந்தியாவில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு சார்பாக செயல்படுகிறது. இது சர்க்கரை, வெல்லம் மற்றும் மின்சார சக்தி உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
வரலாறு
[தொகு]நலிவுற்ற சர்க்கரை ஆலைகளை அரசு எடுத்து நடத்துவதற்காக தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் (TNSCO) 1974 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
தமிழ் நாடு சக்கரைக் கழகத்தின் பணிகள்
[தொகு]தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் கீழ் அறிஞா் அண்ணா சர்க்கரை ஆலை மற்றும் மதுரா சர்க்கரை ஆலை என இரு ஆலைகள் இருந்தன. இதில் மதுரா சர்க்கரை ஆலை மூடப்பட்டுவிட்டது.
மதுரா சர்க்கரை ஆலை
[தொகு]- அமைவிடம் - பாண்டியராஜபுரம், மதுரை
- நிலை - கரும்புவரத்து குறைந்ததால் நீண்டகாலமாக மூடப்பட்டது.
அறிஞா் அண்ணா சர்க்கரை ஆலை
[தொகு]- இடம் - குருங்குளம் மேல்பதி கிராமம், கந்தர்வக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்
- தொடக்கம் - 1976 - 1977
- கொள்ளளவு - 2500 டிசிடி
- இது பொதுத்துறை சர்க்கரை ஆலை ஆகும்.
பெரம்பலூர் சர்க்கரை ஆலை
[தொகு]பெரம்பலூர் சர்க்கரை ஆலையானது, தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் துணை நிறுவனம் ஆகும்.
- இடம் - எறையூர் பெம்பலூர் மாவட்டம்
- தொடக்கம் - 28-02-1978
- கொள்ளளவு - 2500 டிசிடி
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- TASCO - Official Website பரணிடப்பட்டது 2013-01-22 at the வந்தவழி இயந்திரம்