தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்
தோற்றம்
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது ஆவின் எனும் வணிகப்பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
வரலாறு
[தொகு]தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பிப்ரவரி 1 1981 அன்று முதல் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.
விற்பனை செய்யப்படும் பால் வகைகள்
[தொகு]| சிப்பம் நிறம் | வகை/ரகம் | கொழுப்புச் சத்து அளவு (சதவீதம்) | சிப்பம் நிறம் |
|---|---|---|---|
| சிவப்பு | முழுக் கொழுப்பு செறிந்த பால் | 6 % | |
| பச்சை | நிலைப்படுத்திய பால் | 4.5 % | |
| நீலம் | சமன்படுத்திய பால் | 3 % | |
| மெஜன்டா | இருநிலை சமன்படுத்திய பால் | 1.5 % |
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழ்நாடு அரசு - ஆவின் பரணிடப்பட்டது 2013-07-25 at the வந்தவழி இயந்திரம்