தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் - 1947

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் நலன்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு 1947 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் - 1947(en: Tamilnadu Shops and Establishments Act - 1947) கொண்டு வந்தது.

கடைகள்[தொகு]

வணிகம் அல்லது வியாபாரம் செய்யும் இடம் அல்லது வாடிக்கையாளருக்குப் பணியாற்றும் இடம் மற்றும் இதனுடன் தொடர்புடைய அலுவலகம், சேமிப்புக் கிடங்குகள் போன்றவைகள் கடைகள் என்கிற வரையறைக்குள் அடங்கிவிடுகின்றன.

நிறுவனங்கள்[தொகு]

கடைகள், வியாபார இடங்கள், திரையரங்கங்கள் அல்லது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடங்கள் போன்றவை நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் வருகின்றன.

விதிமுறைகள்[தொகு]

  • கடைகள் அல்லது நிறுவனங்கள் மூடப்படும் நேரத்தை அரசு நிர்ணயிக்கும். கடையை மூடும் நேரம் வந்த நேரத்தில் வாடிக்கையாளர் காத்திருந்தால் கடையை அடைக்க 15 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம்.
  • கடை அல்லது நிறுவனத்தில் ஒரு தொழிலாளி தினசரி 8 மணி நேரத்திற்கு மேலும், வாரத்தில் 48 மணி நேரத்திற்கு அதிகமாகவும் வேலை செய்யக்கூடாது. இதற்கு மேல் வேலை செய்தால் மிகுதிநேர ஊதியம் (en: Overtime wages) கொடுக்க வேண்டும்.
  • வாரத்திற்கு ஒருநாள் கடை மூடப்பட்டிருக்க வேண்டும். வாரத்தில் எந்த நாள் விடுமுறை என்பதை கடை உரிமையாளர் முடிவு செய்து அந்நாளை கடையில் அனைவரும் பார்க்கும் இடத்தில் அறிவிப்பு செய்து ஒட்டி வைக்க வேண்டும்.
  • நிறுவனத்தின் இடம் சுத்தமாக வைக்கப்பட வேண்டும். நல்ல காற்றோட்ட வசதியுடன், நல்ல வெளிச்சமும் இருக்க வேண்டும். தீ விபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு 12 மாத கால தொடர்ச்சியான பணிக்குப் பிறகும் அடுத்து வரும் 12 மாத காலத்தில் 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
  • எந்த நிர்வாகமும் தன்கீழ் பணியாற்றியவர்களை தக்க காரணமின்றி ஒரு மாத முன்னறிவிப்பு அல்லது ஒரு மாத சம்பளம் தராமலும் வேலைநீக்கம் செய்யக்கூடாது. தக்க காரணமின்றி அல்லது குற்றம் எதுவுமின்றி வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி நிர்வாகத்தின் செயல்பாட்டை எதிர்த்து தொழிலாளர் துணை ஆணையாளர் பதவியிலிருப்பவரிடம் ஒரு மாத காலத்திற்குள் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும்.

வெளி இணைப்புகள்[தொகு]