தமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம், தமிழ்நாடு அரசு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் இறந்தால் அவர்களது குடும்பங்களுக்கு விபத்து நிவாரண நிதி வழங்கிட ஒருங்கிணைந்த திட்டத்தினை 23 மே1989 அன்று அறிவித்துள்ளது.[1][2]

இந்த விபத்து நிவாரண திட்டத்தின்படி ஒரு தொழிலாளி அல்லது கைவினைஞர் தன்னுடைய தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதோ அல்லது அத்தொழில் சார்ந்த இதர பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதோ விபத்துக்குள்ளாகி இறந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ விபத்து நிவாரண உதவித்தொகை வழங்கலாம். (தமிழ்நாடு அரசாணை நிலை எண் 570 வருவாய் (என்.சி.1) துறை நாள்:27.10.1999)

விபத்து குறித்தான விளக்கம்[தொகு]

  • விபத்து என்பது இறப்பு அல்லது முற்றிலும் நேரிடை வெளித்தாக்குதலினால் ஏற்படும் நிகழ்வின் விளைவாக பார்வைக்கு புலப்படும் எந்த ஒரு உடற் காயம் என்றும் பொருள்படும்.
  • மது போதை, அணுக்கதிர் வீச்சு, யுத்தம் இயற்கை சீற்றங்கள், வாகன விபத்து, கலகங்களினால் ஏற்படும் விபத்து நீங்கலாக ஏனைய விபத்துகளில் ஏற்படும் மரணம் அல்லது இடல் ஊனம் விபத்து எனக் கருதப்படும்.
  • மது அல்லது மருந்து அருந்தி சித்தம் கலங்கிய நிலையில் விபத்திற்கு உள்ளாதல் அல்லது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளல், தற்கொலை செய்து கொள்ளல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் பொருந்தாதவை ஆகும்.
  • அணு வெடிப்பு தாக்குதலான போரினாலோ அல்லது வேறு இடற்பாடுகளாலோ ஒரு மொத்த பிரிவினர் பாதிக்கப்பட்டாலும் இத்திட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
  • மரணமடைந்த தொழிலாளியை பிரேத பரிசோதனை செய்யாமல் புதைத்தாலோ அல்லது எரித்தாலோ அவரது குடும்பத்திற்கு இத்திட்டத்தின் கீழ் நிவாரண உதவித் தொகை வழங்கிட இயலாது.

விபத்து நிவாரண நிதி உதவி கோர தகுதியானவர்கள்[தொகு]

  1. இறந்து போனவரின் மனைவி / கணவன்
  2. இறந்தவரின் திருமணமாகாத மூத்த மகன் அல்லது மூத்த மகள் (மைனராக இருப்பின் அவர்களது பாதுகாவலர்)
  3. இறந்தவரின் பராமரிப்பில் இருந்த தாய் / தந்தை
  4. இறந்தவரின் பராமரிப்பில் இருந்த மூத்த பேரன் அல்லது மூத்த பேத்தி
  5. இறந்துபோனவரைச் சார்ந்து அவருடன் வாழ்ந்தவர்களில் வயதில் மூத்தவர் வாரிசுதாரர்களை பொருத்தவரையில் அவர்கள் சிறுவர்களாகவோ, சிறுமியர்களாகவோ இருந்தால் அத்தொகையை அவர்களது பெயரில் உரிய வயது நிரம்பும் வரை (18 வயதாகும்வரை) சேமிப்பு கணக்கில் வைக்க வேண்டும். (அரசு கடித எண் 27512 / எஸ்1/90-2/ வருவாய்த்துறை நாள்:9.3.90)

விண்ணப்பிக்க வேண்டிய முறை[தொகு]

  • மரணமடைந்த நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை நேரடியகாக தனி வட்டாட்சியருக்கு அனுப்பிட வேண்டும்.
  • மரணமடைந்த நாளில் இருந்து 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இத்திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்களை முடிவு செய்வதில், நலிந்தோர் நல உதவி திட்ட தனி வட்டாட்சியர்களின் முடிவே இறுதியானது. இது தொடர்பான மேல் முறையீடுகள் எதுவும் ஏற்க முடியாது. (அரசு கடித எண்.104043/எஸ்1/91-5 வருவாய்த்துறை நாள்:18.5.92)

விபத்து நிவாரண நிதி வழங்கிட தகுதியில்லாத மரணங்கள்[தொகு]

  • இடி,மின்னல் தாக்கி இறப்பவர்களுடைய வாரிசு தாரர்களுக்கு விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கிட இயலாது.(அரசு கடித எண்.55109/90-4 வருவாய்த்துறை)
  • இரயில் மோதி இறந்து போனதற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கிட இயலாது. (அரசு கடித எண்1099/99-4 வருவாய்த்துறை நாள்:7.12.99)
  • தானே காயம் உண்டாக்கி கொள்ளுதல் / தற்கொலை மூலம் மரணம் ஆகியவை இவ்வினத்தின் கீழ் பொருந்தாது.
  • பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் கடித்து மரணமடைந்தவர்கள் விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறுவதற்கு காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையும் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் தவறாது தாக்கல் செய்ய வேண்டும். (அரசாணை நிலை எண் 673 வருவாய்த்துறை நாள்:2.12.99)
  • பதிவு செய்யப்பட்ட கட்டிட தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகும் போது விபத்து நிவாரண திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கிட தேவையில்லை. (அரசு கடித எண் 58845/ ஐ /99-13 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை நாள்:20.6.2000)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu: Accident Relief Scheme". Archived from the original on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.
  2. "ACCIDENT RELIEF SCHEME". Archived from the original on 2017-10-08. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.

வெளி இணைப்புகள்[தொகு]