தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், திண்டுக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், திண்டுக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட கூட்டுறவு சங்கம் ஆகும். இதன் தலைமையிடம் திண்டுக்கல்.

தோற்றம்[தொகு]

திண்டுக்கல் போக்குவரத்து கழக மண்டலத்தை சேர்ந்த பணியாளர்கள் தங்களது சமூக, பொருளாதார நிலைகளில் இருந்து மேம்பாடு அடைய தங்களுக்குள் ஒன்று சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பு, எம்.டி.107 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் ஆகும்.

பதிவு[தொகு]

இச்சங்கம் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு 9 துணைப்பிரிவு (1), (3)ன் படி 16.2.1990ம் தேதி பதிவு செய்யப்பட்டு, 11.1.1991ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு நாளது தேதி வரை செயல்பட்டு வருகிறது.

விவகார எல்லை[தொகு]

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்கள்

உறுப்பினர் சேர்க்கை[தொகு]

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலத்தில் நிரந்த பணியாளராக பணியாற்றும் எவரும் இச்சங்கத்தில் உறுப்பினராக சேரலாம். உறுப்பினராக சேர விரும்புபவர் குறைந்தது 10 பங்குகளாவது பெற வேண்டும்.

இணை உறுப்பினர் சேர்க்கை[தொகு]

நகைக்கடன் மற்றும் வைப்பு தொகை இட்டு வைத்தல் போன்ற சேவைகளை பெறுவதற்காக பொது மக்கள் இணை உறுப்பினராக சேரலாம்.

உறுப்பினர் விலகல்[தொகு]

உறுப்பினராக சேர்ந்த ஒருவர் குறைந்த பட்சம் 3 ஆண்டுகளாவது உறுப்பினராக இருக்க வேண்டும். மனுதாரர் மற்றும் ஜாமீன்தாரருக்கு கடன் நிலுவை எதுவும் இருக்க கூடாது.

சிக்கன சேமிப்பு[தொகு]

துணை விதி 4.1.1ன்படி உறுப்பினராக உள்ள அனைவருக்கும் அவர்கள் உறுப்பினராக சேர்ந்த நாள் முதல் சிக்கன சேமிப்பாக, சங்க துணைவிதிப்படி குறைந்த பட்சம் ரூ.300 அல்லது அவர்கள் விரும்பும் கூடுதல் தொகை சிக்கன சேமிப்பாக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இத்தொகைக்கு துணைவிதி 4.1.2ன்படி வட்டி வழங்கப்படும்.

கடன் வழங்கல்[தொகு]

உறுப்பினர்களிடம் இருந்து கடன் விண்ணப்பம், சம்பள சான்றிதழ், சங்கம் மற்றும் போக்குவரத்துக்கழகத்திற்கு 1988ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் விதி 69 (1)ல் உள்ளபடி ஒப்பந்தம், கடன் உறுதிமொழி பத்திரம், ஒரு நபர் ஜாமீன் இவற்றின் அடிப்படையில் நபருக்கு ரூ,3,00,000 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

கடனுக்கான வட்டி வீதம்[தொகு]

மத்திய வங்கியில் இருந்து சங்கம் பெறும் கடனுக்கான வட்டியை விட கூடுதலாக 2 சதவீதம் ஆதாயம் சேர்த்து உறுப்பினர்களிடம் வசூல் செய்யப்படும்.

நகைக்கடன்[தொகு]

உறுப்பினருக்கும் இணை உறுப்பினருக்கும் நகைக்கடன் கிராம் 1க்கு ரூ,1,800/- வீதம் அதிகபட்சம் ரூ8,00,000/- ஒரு நபருக்கு வழங்கப்படுகிறது. இக்கடனை ஒரு வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டும்.

நிர்வாகம்[தொகு]

அ-வகுப்பு உறுப்பினர்கள் நிர்வாக குழுவிற்கு 11 உறுப்பினர்களை ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பர். தலைவர் மற்றும் துணைத்தலைவரை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர்.