தமிழ்நாடு அரசு நீர்வள ஆதார அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீர்வளம் குறித்த செயல்பாடுகளைக் கவனிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பொதுப்பணித்துறையின் கீழ் தமிழ்நாடு அரசு நீர்வள ஆதார அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது.

பணிகள்[தொகு]

இந்த அமைப்பு தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் சராசரி நிலநீர் மட்டம், நிலநீர்த் தரம், மழை அளவு மற்றும் நிலத்தடி நீர் நுகர்வு பாகுபாடு போன்ற அனைத்துத் தகவல்களையும் கொண்டுள்ளது. நிலநீர்த் துறையால் மக்களுக்கு கீழ்காணும் சில சேவைகள் அளிக்கப்படுகின்றன.

  1. நிலத்தில் கிணறு அல்லது ஆழ் துளை கிணறு தோண்டுவதற்கு உகந்த இடத்தை தேர்வு செய்ய புவி பௌதீக ஆய்வு சேவைகளை அளிக்கிறது.
  2. நீர் மாதிரியை பரிசோதனை செய்து உங்களுக்கு அந்நீரின் தரத்தினைத் தெரிவிக்கிறது.இந்தப் பரிசோதனைக்காக வீட்டு உபயோகத்திற்கு - ரூ.250/- விவசாய உபயோகத்திற்கு - ரூ.75/-ஐயும் கட்டணம் பெற்றுக் கொள்கிறது.
  3. இவ்வமைப்பால் சேகரிக்கப்படும் புள்ளி விபரங்களைப் பொதுமக்களின் உபயோகத்திற்கு வழங்குகிறது.

வழங்கப்படும் புள்ளி விவரங்கள்

அ. நிலத்தடி நீர் மட்டம்

ஆ. நிலத்தடி நீரின் தன்மை

இ. மழை அளவு மற்றும் தட்ப வெப்ப நிலை

ஒரு புள்ளி விபரம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு வழங்குவதற்கு, வரைவுக் காசோலையாகச் செலுத்த வேண்டிய கட்டணமாக மாணவர்கள்- ரூ.100/- அரசு சாரா அலுவலர்கள்- ரூ.200/- ஆலோசனைக் கூறும் நிறுவனங்கள் - ரூ.300/- மற்றவர்கள்- ரூ.500/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • நிலநீர் உபயோகத்தினைச் சார்ந்த புதிய தொழிற்சாலை, நிறுவனம் அல்லது கூட்டமைப்பு ஆரம்பிக்க இந்நிலநீர்த் துறையிலிருந்து நிலநீர் இருப்புச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]