தமிழ்நாடு-மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தோற்றம்[தொகு]

தமிழ்நாட்டில் மலைகளை மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைகளை விட மேற்கு தொடர்ச்சி மலைகள் சற்றே மாறுபட்ட அமைப்புடன் காணப்படுகிறது. இதன் சராசரி உயரம் 1000 மீட்டர்கள் முதல் 1500 மீட்டர்கள் வரை உள்ளன. தமிழ்நாட்டில் மலைத் தொடரின் அதிகபட்ச உயரமான சிகரங்கள் தொட்டபெட்டா(2620 மீட்டர்கள்) மற்றும் முக்கூர்த்தி (2540 மீட்டர்கள்) ஆகும். மேற்கு மலைத்தொடரின் வட மேற்கு பகுதியில் நீலகிரி உயர்நிலப்பகுதி சுமார் 2500 சதுர மீட்டர்கள் பரப்பில் பரவிக் காணப்படுகிறது. இவ்வுயர்நிலப்பகுதியின் சராசரி உயரம்1800 மீட்டர் முதல்2400 மீட்டர் வரை ஆகும். அவற்றில் தொட்டபெட்டா சிகரம் தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரமாகும். மேற்கு மலைத்தொடரும், கிழக்கு மலைத்தொடரும் நீலகிரி மலைப்பகுதியில் ஒன்று சேர்கின்றன. தமிழ்நாட்டின் நீலகிரியிலிருந்தும் கேரளாவின் ஆனைமுடியிலிருந்தும் ஓர் கிளைத்தொடர் குன்று கிழக்கு நோக்கி சுமார் 1500 மீட்டர்கள் முதல் 2000 மீட்டர்கள் வரை உயரத்தில் கிழக்கு நோக்கிச் செல்கிறது. இதற்கு பழனிக்குன்றுகள் என்று பெயர். பழனிக்குன்றுகளுக்கு தெற்கே வருசநாடு, ஆண்டிப்பட்டி என்ற இரு மலைத் தொடர்கள் காணப்படுகின்றன. மேற்கு 25 கி.மீ நீளத்தில் ஓர் கணவாய் காணப்படுகிறது. பாலக்காடு கணவாய்க்குத் தெற்கே ஆண்டிப்பட்டி மலை, ஏலமலை, அகத்தியமலை ஆகிய மலைகள் காணப்படுகின்றன. ஏலமலைத் தொகுதியில் செழிப்புமிக்க கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. வருசநாடு மலைக்கும் அகத்தியமலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி, செங்கோட்டை கணவாய் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிகளையும், பீடபூமிகளையும் பிரிக்கும் தமிழ்நாட்டின் மலைகளுக்கு இடையே இரண்டு குறிப்பிடத்தக்க இடைவெளிகள் காணப்படுகின்றன. அவை தெற்கில் ஆத்துர் கணவாய் என்றும் வடக்கில் செங்கம் கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கணவாய்கள் கடலூர் மாவட்டத்தை சமவெளிப் பகுதியோடும், சேலம் மாவட்டத்தை பீடபூமி பகுதியோடும் இணைக்கிறது. இடைவெளியற்று நீண்டு ஓடும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் குறிப்பிடத்தக்க கணவாய்கள் பாலக்காடும், செங்கோட்டையும் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும் பொழுது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாக காணப்படுகின்றது. இடைவெளிவிட்டு காணப்படும் தனித்த மலைப்பகுதிகள் வடகிழக்கில் இருந்து தென்மேற்காக வேலூர், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விரவிக் காணப்படுகின்றது. இம்மலைகளின் சராசரி உயரம் 1100 மீட்டர்கள் முதல் 1600 மீட்டர்கள் வரை ஆகும். இம் மலைப்பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

மலைகள் மற்றும் மாவட்டம்[தொகு]

1. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலை 2. சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலை 3. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்ராயன் மலை 4. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பச்சைமலை 5. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை 6. தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்திலும் விரவியுள்ள சித்தேரிமலை 7. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செஞ்சிமலை

உயர்ந்த மலைகள்[தொகு]

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை- சேர்வராயன் மலை(1500-1600 மீட்டர்கள்) மேற்கு தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை –ஆனைமலை(2700 மீட்டர்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

en.wikipedia.org/wiki/Category:Mountains_of... en.wikipedia.org/wiki/Nilgiri_mountains www.wikidata.org/wiki/Q10022942 www.tripoto.com/mountains/in-tamil-nadu www.academia.edu/7179501/Sacred_Mountains_Of_Tamilnadu

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு-மலைகள்&oldid=2748369" இருந்து மீள்விக்கப்பட்டது