தமிழ்த் தேசப் புரட்சி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த் தேசப் புரட்சி இயக்கம் தமிழ்நாடு விடுதலை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாட்டு இயக்கம் ஆகும்.

2012ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட இவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தோழர் பா.தமிழரசன் செயல்பட்டு வருகிறார்.

தோழர் பா.தமிழரசன், இந்திய - சிங்கள பயங்கரவாத அரசுகளால் நடத்தப்பட்ட தமிழீழ இனப்படுகொலையைக் கண்டித்து, 2009ஆம் ஆண்டில், இந்திய சிங்கள அரசுகளின் கொடிகளை எரிக்கும் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி, அதற்காக கோவை நடுவண் சிறையில் 200 நாட்கள் சிறையில் இருந்தார்.

முல்லைப்பெரியாறு சிக்கலைக் காரணம் காட்டி கேரளாவில் அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய மலையாளிகளை கண்டித்து, தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பா.சங்கரவடிவேல், தோழர் பிறை.சுரேசு உள்ளிட்ட 15 தோழர்கள் 2011ஆம் ஆண்டில், கோயம்புத்தூர் நகரில் ஆதிக்கம் செலுத்தும் ஆலுக்காசு உள்ளிட்ட மலையாள நிறுவனங்கள் மீது பதிலடித் தாக்குதல் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்திற்காக தோழர்கள் அனைவரும் கோயம்புத்தூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர்

தமிழ்த் தேசப் புரட்சி இயக்கம், "தமிழர், தமிழரல்லாதார்" என்ற இயல்பு அரசியலை முன்னெடுத்து தமிழ் மக்களிடம் பரப்புரை செய்து வருகிறது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்து சாதி, மதத்தினரும் தமிழர் ஆவர். பிராமணர், தெலுங்கர், கன்னடர், மலையாளி, உருது பேசுவோர் உள்ளிட்டோரை தமிழ்நாட்டின் மொழி, இன சிறுபான்மையினராக தமிழ்த் தேசப் புரட்சி இயக்கம் வரையறை செய்கிறது.

"தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழ்நாட்டை வரலாற்றுத் தாயகமாகக் கொண்டு, வாழும் தமிழின மக்களுக்கு, இந்திய அரசின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற தமிழ்தேசத்தை படைப்பதே தமிழ்த்தேசியம்" ஆகும்  என்று தமிழ்த்தேசியத்திற்கு வரைவிலக்கணம் அளிக்கிறது தமிழ்த் தேசப் புரட்சி இயக்கம்.

தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின் மாத இதழாக "தமிழர் தாயகம்" இதழ் வெளிவந்து கொண்டு இருக்கிறது.