தமிழ்த்தேச மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த்தேச மக்கள் கட்சி 25.05.2014ல் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தக் கட்சி இந்திய தேர்தல் அரசியலை புறக்கணித்து மக்கள் அரசியலை முன்னிலைப்படுத்துக்கூடியது. தமிழ்த்தேச விடுதலையே நமது இலக்கு! மக்கள் அதிகாரம் நமது அரசியல்!பொதுமை நமது புரட்சி! என்ற முழக்கங்களுடன் தமிழகத்தில் இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

கட்சியின் கோட்பாடு[தொகு]

தமிழ்த்தேச மக்கள் கட்சி இந்தியா என்பது பல்வேறு தேசங்கள் அடங்கிய ஒரு அரசமைப்பு, அதிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற்று தனிநாடாக தன்னை அமைத்துக்கொள்ளும்போதே தமிழக மக்களின் அனைத்துத் துயரங்களுக்கும் முடிவு ஏற்படும் என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கட்சியின் செயல்பாடு[தொகு]

தமிழ்த் தேச விடுதலைக்காக மக்களைத் திரட்டி போராட திட்டமிட்டுள்ள இந்தக் கட்சி மக்களின் ஒருங்கிணைவுக்கு எதிராக உள்ள சாதிய கட்டமைப்பிற்கு எதிராகவும் போராடும் என அறிவித்துள்ளது. தமிழ்வழிக் கல்வி, ஆற்றுநீர் உரிமை, அணுஉலை எதிர்ப்பு, பெண்கள் சமஉரிமை, தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழக இயற்கை வளங்களையும் காக்கவும், பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலுக்கு எதிராகவும் போராடுவது என இந்த கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.தமிழீழ விடுதலையை இந்தக் கட்சி ஆதரிப்பதுடன் அம்மக்களுக்குத் துணைநிற்கும் என அறிவித்துள்ளது.

கட்சியின் வழிகாட்டி[தொகு]

தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படையை உருவாக்கிய தமிழரசனின்அரசியலை தமிழ்த் தேச மக்கள் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.

கட்சியின் தலைமை[தொகு]

கட்சியின் தலைவராக புகழேந்தியும், பொதுச் செயலாளராக தமிழ்நேயனும் , அமைப்புச் செயலாளராக செந்தமிழ்க் குமரனும், துணைத் தலைவர்களாக செ.இளங்கோவன், தமிழரசன் ஆகியோரும் துணை செயலராக காளை,கொள்கை பரப்புச் செயலராக ஆற்றல் அரசும் உள்ளனர்.

கட்சியின் முழக்கங்கள்[தொகு]

நமது இலக்கு தேசிய சனநாயக புரட்சி! பொதுமை தமிழ்த் தேசம்!

கட்சியின் கொடி: சிவப்பு நிறக் கொடியில் மஞ்சள் நட்சத்திரம்.கட்சியின் அதிகாரப்பூர்வமான செய்தி இதழாக "தமிழ்த்தேச விடுதலை அறம்" என்று மாத இதழ் வெளிவருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]