தமிழ்த்தாய் இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்த்தாய் இதழ், 1934 ஆம் ஆண்டு தொடங்கி மூன்றாண்டுகள் தமிழ்ததாய் என்ற முத்திங்கள் ஏட்டை சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது. பெரும்புலவர் இ. மு. சுப்பிரமணியனாரை இதழாசிரியராகவும், கா. சு. பிள்ளை உள்ளிட்ட பதினாறு பேரை பொறுப்பாளர்களாகக் கொண்டு தமிழ்த்தாய் இதழ் வெளிவந்தது.[1]

இதழின் நோக்கங்கள்[தொகு]

  • புதிய நூல்கள் இயற்றுதல்
  • மறைந்து கிடக்கும் தமிழ்நூல்களை வெளிக் கொணர்தல்
  • தமிழ்நூல்களை உலக மொழிகளில் மொழிபெயர்த்துப் பரவச் செய்தல்
  • பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழில் பெயர்த்தல்

சாதனைகள்[தொகு]

தமிழ்த் தாயில் முத்தமிழையும் வளர்க்கும் விதத்தில பல கட்டுரைகள் வெளிவந்தன. கலைச்சொல்லாக்கம், தமிழ் மருத்துவம், தமிழர் வானியல், தனித்தமிழ் வளர்ச்சியின் தேவை ஆகிய தொடர் கட்டுரைகள் தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின. தமிழ்த்தாய் தமிழ் நலமும், தமிழ் மக்கள் நலமும் பேணும் விதத்தில் அரும்பணியாற்றியுள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. கி. செளந்தரராசன், மாநிலத் தமிழ்ச் சங்கம், கதிரவன் பதிப்பகம், திருநெல்வேலி. முதற் பதிப்பு:2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்த்தாய்_இதழ்&oldid=2930691" இருந்து மீள்விக்கப்பட்டது