தமிழ்ச் சுவடியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ச் சுவடியியல் என்பது தமிழ் சுவடிகளின் உள்ளடக்கத்தை, உருவாக்கத்தை, பராமரிப்பை, வரலாற்றை ஆயும் இயல் ஆகும். தமிழ்ச் சுவடிகளைக் கண்டுபிடித்தல், பட்டியலிடுதல், பேணுதல், வாசித்தல், விளக்குதல், மொழிபெயர்த்தல் உட்பட்ட செயற்பாடுகள் இத் துறையில் அடங்கும். இது தமிழ் தொல்லியல் துறையின் ஒரு துணைப் பிரிவாகும். தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம் ஆகியன தமிழ்ச் சுவடியியல் தொடர்பான கல்வியினை வழங்குகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ச்_சுவடியியல்&oldid=1873745" இலிருந்து மீள்விக்கப்பட்டது