தமிழ்ச்சங்க அகராதி
Jump to navigation
Jump to search
தமிழ்ச்சங்க அகராதி, தமிழ் - தமிழ் அகரமுதலிகளுள் மிகவும் பெரியது. இது மூன்று பெருந்தொகுதிகளாக வெளிவந்தது. இந்த அகராதியை உருவாக்கியவர் யாழ்ப்பாணம் நீதிபதி கு. நா. கதிரவேற்பிள்ளை. இதனை வெளியிடும் முன்னர் இவர் காலமானார்.
மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவரான பாண்டித்துரைத் தேவர் அகராதியின் கையெழுத்துப் பிரதிகளை கதிரைவேற்பிள்ளையின் மகன் பாலசிங்கத்திடமிருந்து பெற்று, மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்கள் மற்றும் சே. ரா . சுப்பிரமணியக் கவிராயர் ஆகியவர்களின் கூட்டு முயற்சியால் தமிழ்ச்சங்க அகராதியை மூன்று பகுதிகளாக 1910, 1912, 1923 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டனர்.[1]