தமிழீழ தேசிய தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழீழ தேசிய தொலைக்காட்சி என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும். 2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிச் சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இச்சேவையே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும். தினமும் இரண்டு மணிநேரம் ஓளிபரப்பானது. இலங்கை, இந்தியா, மாலைதீவு, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் செய்மதித் தொடர்பு மூலம் இதனைப் பார்க்க முடிந்தது.