தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் தமிழீழத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் நாளன்று எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழீழப் போராட்ட வரலாற்றிலே 1987இல் முதன் முதல் களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதியின் நினைவு நாளில் இது நினைவு கூரப்பட்டுவருகிறது.

1984 முதல் பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டனர். தொடக்கத்தில் பெண்போராளிகள் ஆண்போராளித் தளபதிகளின் கீழ் செயற்பட்டாலும், 90களின் பிற்பகுதியில் தனித்துவமாக செயற்படும் வகையில் பெண்கள் படையணி புலிகளால் கட்டியெழுப்பப்பட்டது. பெண்போராளிகள் புலிகளின் அனைத்து விதமான கட்டமைப்புக்குள்ளும் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் இராணுவ படையணியாக மட்டுமல்லாது, தொழினுட்பத்துறை, பொறியியல்துறை, மருத்துவம், கடற்படை, அரசியல், நிர்வாகக்கட்டமைப்பிலும் ஆண்போராளிகளுக்கு நிகராகவே உள்ளனர்.

தமிழீழ போராட்ட வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத சக்தியாக பெண்போராளிகள் வளர்ந்துள்ளனர். 1987 ஒக்டோபர் 10, இந்திய அமைதிப் படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதலை தொடங்கிய நாள் அன்று கோப்பாயில் இந்திய படைகளுடன் இடம் பெற்ற மோதலின் கொல்லப்பட்டவரே 2ம் லெப்.மாலதி ஆவார். இதுவரையில் 3000 பெண்போராளிகள் கடலிலும், தரையிலும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]