தமிழில் கலைக்களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் மொழியில் உள்ள கலைக்களஞ்சியங்களின் தன்மை, வரலாறு, முக்கியத்துவம், எதிர்காலம் பற்றி இந்தக் கட்டுரை விபரிக்கும்.

வரலாறு[தொகு]

தமிழ் 2000 வருடங்களுக்கு மேற்பட்ட இலக்கிய வரலாற்றைக் கொண்ட மொழி. மொழியியல், வாழ்வியல், மெய்யியல், கலைகள் ஆகியவற்றை விபரித்து தமிழில் பல ஆக்கங்கள் உண்டு.

ஆனால் தொழில்நுட்பம், அறிவியல், அடிப்படைத் தகவல்கள் ஆகியவற்றை கருவாக்கிய ஆக்கங்கள் தமிழில் இன்ப இலக்கியங்கள் அளவுக்கு இல்லை, அல்லது இன்று அவை கிடைக்கவில்லை. எனினும் நீண்ட தமிழ் வரலாற்றில் மருத்துவம், வானியல், வர்மக்கலை, சிலம்பம், வேதியியல், கணிதம் ஆகியவற்றை கருவாக்கிய பல ஏடுகள் பல உண்டு. தமிழ் இலக்கியங்கள் மீட்டெக்கப்பட்டு, ஆயப்பட்டு பதிக்கபப்ட்டது போன்று இவை பற்றிய இணையான ஆர்வம் இருக்கவில்லை. அதன் நீட்சியாக இத்தகைய தகவல்களை தொத்து தரக் கூடிய ஆக்கங்கள் 20 நூற்றாண்டுவரை தமிழில் எளவில்லை.

தொல்காப்பியம், திருக்குறள் இரண்டுமே பல தகவல்களை ஒழுங்குபடித்தி பகிர்ந்த சிறந்த ஆக்கங்கள் ஆகும். அவற்றை தமிழில் தோற்றிய தொன்மை கலைக்களஞ்சியங்கள் என்று சிலர் கூறுவர். சிலப்பதிகாரம், திருமந்திரம், பெரிய புராணம் போன்ற இலக்கியங்களிலும் பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. எனினும் அவற்றை கலைக்களஞ்சியங்கள் என்று கூற இயலாது.

தமிழில் சொற்களுக்கு பொருள் சொன்ன நிகண்டுகள் கலைக்களஞ்சியத்துக்கு ஒத்த நோக்கும், அமைப்பும் உடையவை. பெரும்பாலன நிகண்டுகள் 10 நூற்றாண்டுக்கு பிற்பட்டவை.

சித்தர்களின் படைப்புகளில் தொழில்நுட்ப அறிவியல் தகவல்கள் உள்ளன. எனினும் இவற்றின் எண்ணிக்கை மிக குறைவே. தற்போதே இவர்கள் எழுதிய மருத்துவம், கணிதம், வேதியல், தற்காப்புகலைகள் போன்ற ஏடுகள் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.