தமிழியல் (இதழ்)
Appearance
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழியல் என்ற பருவ இதழ் வெளியாகின்றது. இதை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.[1]
இதழ் வரலாறு
[தொகு]பேராசிரியர் மறைதிரு எஸ்.தனிநாயகம் அடிகள் அவர்கள் 1951ஆம் ஆண்டு தமிழ்க் கலாச்சாரம் (Tamil Culture) என்ற இதழைத் தொடங்கினார். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்குப் பிறகு 'அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்' தனிநாயகம் அடிகளாரின் ஒப்புதலைப் பெற்று தமிழ்க் கலாச்சாரம் இதழினை 'தமிழியல்' என்ற இதழாகப் பெயர் மாற்றம் செய்து வெளியிட்டு வந்தனர். 1972 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழியல் ஆய்வு இதழை வெளியிட்டு வருகிறது.