தமிழியல் விருது 2010
தமிழியல் விருது என்பது இலங்கை, மட்டக்களப்பு அமிர்தகழியில் இயங்கிவரும் எழுத்தாளர் மையம் ஆண்டுதோறும் வழங்கிவரும் விருதாகும். இலங்கையிலும், மற்றும் புலம்பெயர்ந்தும் வாழும் படைப்பாளிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
2010 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருது பெற்ற படைப்பாளிகளின் பட்டியல் வருமாறு,
உயர் தமிழியல் விருது
[தொகு]எழுத்தாளர் ஊக்குவிப்பு ஸ்தாபகர் பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
தமிழியல் வித்தகர் பட்டம்
[தொகு]தமிழியல் வித்தகர் பட்டமும், தலா 15,000 ரூபாய் பொற்கிழியுடன் வவுனியூர் ஸ்ரீ இராமகிருஸ்ணா கமலநாயகி தமிழியல் விருதும்
- டொமினிக் ஜீவா
- அநு. வை. நாகராஜன்
- சா. இ. கலலநாதன்
- ந. பாலேஸ்வரி
- அருணா செல்லத்துரை
- ஆரையூர் நவம்
தமிழியல் விருது - தெரிவான நூல்கள்
[தொகு]தமிழியல் விருதுக்காக 2009ம் ஆண்டு வெளிவந்த நூல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவைகள்
குழந்தை இலக்கியம்
[தொகு]பதிவாளர் நாயகம் எஸ். முத்துக்குமாரன் தமிழியல் விருதுடன் ரூபாய் 10,000 பொற்கிழி
- குடை நடை கடை - வசந்தி தயாபரன்
உளவியல்
[தொகு]கல்விமான் க. முத்துலிங்கம் தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பொற்கிழி
- உள்ளம் பெருங்கோயில் - கோகிலா மகேந்திரன்
காவியம்
[தொகு]கவிஞர் கல்லாறன் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி
- நெருப்புக்கு இடையே நீந்தும் நிலாக்கள் - நிலா தமிழின்தாசன்
கவிதை
[தொகு]புலவர்மணி ஆ. மு. சரீபுத்தீன் தமிழியல் விருதுடன் ரூபாய் 10,000 பொற்கிழி
- கவிதையில் துடிக்கும் காலம் - மு. பொன்னம்பலம்
சிறுகதை
[தொகு]வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் தமிழியல் விருதுடன் ரூபாய் 10,000 பொற்கிழி
- மனைவி மகாத்மியம் - சுதாராஜ்
நாவல்
[தொகு]நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி
- தெம்மாடுகள் - எஸ். ஏ. உதயன்
- மக்கள்... மக்களால்... மக்களுக்காக - வி. ஜீவகுமாரன் (டென்மார்க்)
- குறும்புக்கார ஆமையார் (சிறுவர் நாவல்) - ஓ.கே. குணநாதன்
நாடகம்
[தொகு]செந்தமிழ்ச்சல்வர் ஸ்ரீஸ்கந்தராஜா தமிழியல் விருதுடன், ரூபாய் 10000 பொற்கிழி
- கங்கையின் நாட்டுக்கூத்து - அகளங்கன்
கலைஞர் எஸ். கணகதிப்பிள்ளை தமிழியல் விருதுடன், ரூபாய் 10000 பொற்கிழி
- கூத்துக்கள் ஐந்து - கலையார்வன் கு. இராயப்பு
மொழிபெயர்ப்பு
[தொகு]புரவலர் நளீம் ஹாஜியார் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி
- பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும் - கெக்கிராவ சுலைஹா
வரலாறு
[தொகு]சிவநெறிப்புலவர் சீ.ஏ. இராமஸ்வாமி தமிழியல் விருதுடன், ரூபாய் 10000 பொற்கிழி
- மருதமுனையின் வரலாறு - ஆ.மு. சரீபுத்தீன்
ஆய்வியல்
[தொகு]புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி
- தேடலும் விமர்சனங்களும் - இ. ஜீவகாருண்யம்
புரவலர் ந. ஜெதீசன் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி
- அரசறிவியல் - வே. குணரத்தினம்
அறிவியல்
[தொகு]சுவாமி விபுலானந்தர் தமிழியல் விருதுடன், ரூபாய் 10000 பொற்கிழி
- ஏழாவது ஊழி - பொ. ஐங்கரநேசன்
பழந்தமிழ் இலக்கியம்
[தொகு]பம்பைமடு நாகலிங்கம் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி
- செந்தமிழ் வளம் பெற வழிகள் - த. கனகரத்தினம்
இன நல்லுறவு இலக்கியம்
[தொகு]வண.பிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி
- பத்திற்கும் மேற்பட்ட இன நல்லுறவு நூல்களை எழுதியுள்ள - சிட்னி மாக்கஸ் டயஸ்
குறும்படம் (இறுவட்டு)
[தொகு]துறையூர் வே. நாகேந்திரன் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி (இணைவிருது)
- கிழக்கு வானம்
- பள்ளிக்கூடம்
ஓவியம் / வடிவமைப்பு
[தொகு]ஓவியர் டாக்டர் சிக்கோ தமிழியல் விருதுடன் 5000 ரூபாய் பொற்கிழி
- சுசிமன் நிர்மலவாசன்
பதிப்பகம்
[தொகு]புரவலர் எல். சோலைமலைத் தேவர் தமிழியல் விருதுடன் 50000 ரூபாய் பொற்கிழி
- போர்க்காலச் சூழலில் கோடு போட்ட அப்பியாசக் கொப்பியில் 25க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு சாதனைபடைத்த மீரா பதிப்பக உரிமையாளர் டேவிட் லிகோரி