தமிழர் நகைத் தொழில்நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்களும் பெண்களும் பல்வேறு வகையான அணிகலன்களை அணிவது தமிழர் பண்பாட்டின் ஒரு முதன்மைக் கூறு ஆகும். பண்டைக் காலம் தொட்டு கல், நார், எலும்பு, பல், தங்கம், செம்பு, நவமணிகள் எனப் பல்வேறு பொருட்களைக் கொண்டு நகைகளைச் செய்வர். நகைகளைச் செய்வதற்கும் தங்கம் போன்ற உலோகங்களை துல்லியமாக கையாழுதற்கும் உயர்ந்த தொழினுட்பம் தேவை. இந்த தொழினுட்பம் தமிழர் நகைத் தொழினுட்பம் அல்லது தமிழர் அணிகலன்கள் தொழினுட்பம் எனப்படுகிறது.

மூலங்கள்[தொகு]

தமிழர் நகைத் தொழினுட்பம் பற்றி சிலப்பதிகாரம் முதற்கொண்ட பல்வேறு தமிழ் இலக்கியங்கள் விரிவான தகவல்களைக் கொண்டுள்ளன. ஐம்பெருங் காப்பியங்கள் அனைத்தும் அணிகலன்களை முதற்கொண்டு பெயரிடப்பட்டதில் இருந்து தமிழர் வாழ்வியலில் நகைத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.