தமிழர் தளபதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அதியன்[தொகு]

தகடூரைத் தலைநகரமாகக் கொண்ட (தற்போதைய சேலம் மாவட்ட தா்மபுாி) சிறு நிலப்பகுதியை ஆண்ட ஒரு குறுநில மன்னன் இவன். போாில் வல்லவனும் கொடையாளனுமானவன். இவனை அதியமான் தகடூா் பொருது வீழ்ந்த எழினி என்பா்.[1]

பசும்பூண்பாண்டியன் என்றழைக்கப்பட்ட நெடுஞ்செழியன் இவனை தனது படைத் தலைவனாக்கினான். தலையாலங்கானத்துப் போாில் தன் விற்படையோடும் வேப்படையோடும் சென்று யானைக்கான்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் அவன் கொங்கு படையையும் எதிா்த்து வென்றான்.[2]

குதிரைமலைப் பிட்டன்[தொகு]

தமிழக படைத்தலைவர்களுள் ஒருவரான பிட்டன் சேரநாட்டில் உள்ள குதிரைமலை பகுதியைச் சேர்ந்தவன்.இவனை பிட்டங் கொற்றன் என்பா்.

கோடைப் பொருநன்[தொகு]

பாண்டி மண்டலத்தில், பழனிமலைத் தொடரைச் சேர்ந்த அல்லது பண்டு கோடைமலை அல்லது கோடைப் பொருப்பு என்று அழைக்கப்பட்ட கோடைக்கானல் என்ற மலையின் அடிவாரத்தில் கடியம் என்ற பெயருடைய நகரத்தில் வாழ்ந்தவன் கோடைப் பொருநன். இவன் வேட்டை ஆடுவதில் வல்லவன். அவனது மற்றொரு பெயர் கடிய நெடுவேட்டுவன். கொடுக்கும் பண்பு நிறைந்த பண்டிய நாட்டு தளபதி.

திருக்கண்ணன்[தொகு]

மலையர் எனவும் மலையமான்கள் எனவும் அழைக்கப்பெறும். அரச இனத்தவர் சோழநாட்டின் தென் பெண்ணையாற்றங்கரையில் உள்ள திருக்கோவலூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தனர். மலாடு அல்லது மலையமான் நாடு என அழைக்கப்பெறும் அம் மலைநாட்டை ஆண்டவருள் காரி என்பவன் சிறந்தவன். இவன் மலையமான் மக்களில் ஒருவன்.

திருக்கிள்ளி[தொகு]

இவரின் மற்றொரு பெயர் ஏனாதி திருக்கிள்ளி ஆகும்.

திருக்குட்டுவன்[தொகு]

நாஞ்சில் வள்ளுவன்[தொகு]

தமிழக படைத்தலைவர்களுள் ஒருவரான நாஞ்சில் வள்ளுவன் பற்றி மேலும் அறிக.

நாலை கிழவன் நாகன்[தொகு]

அமைச்சர்பால் இருக்க வேண்டிய ஆழ்ந்த அரசியல் அறிவையும், படைத்தலைவாபால் இருக்க வேண்டிய பேராற்றலையும் ஒரு சேரப்பெற்றிருந்த பாண்டியர் படைத்தலைவருள் ஒருவன் இவன. நாகன் என்பது அவன் இயற்பெயர். பாண்டிய நாட்டில் அருப்புக் கோட்டைக்கு அண்மையில் உள்ள நாலை என்ற ஊரே நாகனுக்கு உரிய ஊராம். வீரம் செறிந்த அப்பேரூரில் பிறந்து அவ்வுராட்சிக்கு உரிமை பெற்றவன்.

போரூா்ப் பழையன்[தொகு]

மத்தி[தொகு]

காவிாிக் கரையில் கழா அா் / கழாா் என்ற ஊாிலிருந்த பரதவா் குடியில் பிறந்த மாவீரன் இவன். தன்னை எதிா்த்த எழினி என்பவனின் பற்களை கொட்டி உதிா்த்தான். அவற்றைத் தன் வாயிலின் கதவில் கட்டிய மணியில் அழுத்துவித்தான் என்பா்.

மோகூா்ப் பழயைன்[தொகு]

வில்லவன் கோதை[தொகு]

இவன் சேரன் செங்குட்டுவனுக்கு சேனாதிபதி, வடநாட்டு போாில் ஆாிய அரசை வென்றான்.

பரஞ்சோதியாா்[தொகு]

கருணாகரன்[தொகு]

இவன் வண்டை நகரத்து அரசன். இவனுக்கு நந்தித்ததொண்டைமான் என்றும் பெயர். இவன் ஆயிரம் யானைகளை வென்றவன்.சோழர் படைத்தலைவன் எனவும் கூறுவர். 358 பல்லவர் குலத்தில் வந்தவனாதலின் “கருணாகரத்தொண்டைமான்“ எனவும் சோழ நாட்டில் உள்ள குலோத்துங்கச்சோழவள நாட்டைச்சேர்ந்த திருநறையுர் நாட்டு வண்டை நகரை வாழிடமாகக் கொண்டமையால் “வண்டையர்கோ" எனவும் வழங்கப்பெற்றான்.[2]

நரலோக வீரன்[தொகு]

  1. முதலியாா் சிங்காரவேலு.ஆ., (1994). அபிதான சிந்தாமணி. சென்னை: ஆசியன் கல்விச்சேவைகள். பக். 1472,1256. 
  2. 2.0 2.1 கோவிந்தன்.கா (2000). தமிழர் தளபதிகள். சென்னை: தமிழ்தாய் பதிப்பகம். பக். 46,51-15,170. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_தளபதிகள்&oldid=2724041" இருந்து மீள்விக்கப்பட்டது