தமிழர் சமையல் கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழம்பொருட்கள்

சில பத்தாண்டுகளுக்கு முன்வரை, தமிழர்களின் மரபுவழிச் சமையல் சாதனங்களைக் கொண்டிருந்த சமையலறைகள், அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், உலகமயமாதலின் செல்வாக்காலும் மறைந்து கொண்டு வருகின்றன. சமையலுக்கான பொருட்களைச் சேமித்து வைக்கும் கொள்கலன்கள், தானியங்களையும், பிற பொருட்களையும் சமையலுக்காகத் தயார்படுத்த உதவும் சாதனங்கள், சமைத்தலின்போது பயன்படும் சாதனங்கள், பரிமாறுவதற்கான சாதனங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் இன்று நகரங்களில் வாழ்பவர்களால் அறியப் படாதவையாகிவிட்டன. தமிழர்கள் மட்பாண்டங்களையும், செம்பு, பித்தளை, வெள்ளியானல் செய்யப்பெற்ற பாத்திரங்களையும் பயன்படுத்தியுள்ளனர். அத்தகைய சாதனங்களில் சில பின்வருமாறு:

சமையல் கருவிகள்
கருவி படிமம் செயற்பாடு உணவு
அம்மி, குழவி Sannikallu.jpg அரைத்தல் சம்பல்
உரல், உலக்கை உரலும் உலக்கையும்.JPGA closeuo of traditional wooden mortar.JPG இடித்தல் நெற் சோறு
ஆட்டுக்கல், குழவி Aattukallu.JPG அரைத்தல் தோசை, இட்லி
திருகைக்கல்லு Raagalraayi.JPG உடைத்தல் பயறு
சின்ன உரல், உலக்கை A depiction of Pestle and mortar.jpg இடித்தல் இஞ்சி பூண்டு மிளகாய்ப் பொடி
துருவுபலகை Coconut-scraper-jaf.jpg துருவுதல் தேங்காய்
அரிவாள்மணை Arivalmanai.jpg அரிதல், வெட்டுதல் காய்கறி
மாப்பலகை, உருளை Chappathi maker.jpg (மா) குழைத்தல், ரொட்டி
இடியப்ப உரல்/முறுக்கு உரல், சில்லு Idiyappa ural.JPG இடியப்பம், முறுக்கு, சிற்பி பிழிதல் இடியப்பம், முறுக்கு, சிற்பி
இடியப்ப இயந்திரம் Idiyappam Maker in wood.jpg இடியப்பம் பிழிதல் இடியப்பம்
முறம்/சுளகு சொளவு.jpg புடைத்தல், தானியங்களின் கோதை பிரிக்க சோறு, உழுந்து
அகப்பை/மர அகப்பை, தட்டகப்பை கலத்தல், ஆற்றுதல் கறி, வறை, பல
அரிதட்டு அரித்தல் மா, அரிசி போன்றவற்றை தூய்மையாக அரித்தெடுக்க
மத்து Churning curds.jpg கடைதல் மோர், பருப்பு, கீரை
வடிகட்டி Sieve.jpg வடித்தல் தேனீர், கோப்பி
பிட்டுக் குழல் Puttu satty.JPG அவித்தல் பிட்டு
இடியப்பச் சட்டி, இடியப்பத் தட்டு Idiyaappam plate.jpg அவித்தல் இடியப்பம்
இட்டலிச் சட்டி Sa idli stand.jpg அவித்தல் இட்டலி
தோசைக்கல் Dosakallu.jpg சுடுதல் தோசை
அடுப்பு, மண் அடுப்பு Clay Stove.jpg சமைத்தல் பல வகை உணவுகள்
உறி சேமித்தல் பல வகை உணவுகள்
மண்சாடி, மண்பானை Pot.jpg குளிர்வித்தல் தண்ணீர்
குடம், செம்பு A brass vessel 1.JPG நீர் சேமித்தல் தண்ணீர்
கல்லரிக்கும் சட்டி Kallarikkum satty.JPG கற்களைப் பிரித்தெடுத்தல்.
இதற்காக வரிசையாகப் படிகளைக் கொண்டிருக்கும்
அரிசி, பிற தானியங்கள்
சட்டி, மண்சட்டி A depiction of mud pot 5.JPG அடுதல்/சமைத்தல் கறி, பல வகை உணவுகள்
பானை A depiction of mud pot 6.JPG வேக வைத்தல் சோறு
கரண்டி, தேக்கரண்டி, முள்ளுக்கரண்டி, மேசைக்கரண்டி Silver spoon.jpeg எடுத்தல், அளத்தல், உண்ணல் பல வகை உணவுகள்
பேணி பரிமாறல் குடிபானம்
தட்டு/கோப்பை A depiction of lid.JPG பரிமாறல் பல வகை உணவுகள்
நீத்துப்பெட்டி உணவை இட்டு வேக வைத்தல், அவித்தல் புட்டு
புனல் Kitchen Funnel.jpg வாய் குறுகிய பாத்திரங்களில் எண்ணெய் ஊற்றல் எண்ணெய்
பிரமனை A bamboo stand.JPG சமையல் கலங்களை தரையில் வைக்க பல வகைப்பாத்திரங்கள்
குழிப்பணியாரக்கல் A shot of Kuzhi paniyaram making.JPG குழிப்பணியாரம் செய்ய குழிப்பணியாரம்
மூங்கில் தட்டு Bamboo craft work.jpg பொருட்களை வைக்க தட்டு
  • கூர்க்கத்தி
  • கொடுவாக் கத்தி
  • கலசம், குவளை; filtering; தண்ணீர்
  • பெட்டிகள், குட்டான்
  • திருகணி
  • சுண்டு
  • குடம்
  • குவளை
  • தாச்சி, அப்பதாச்சி, தட்டை தாச்சி
  • குழியப்பச் சட்டி
  • ஆவிச்சட்டி
  • அடைக்கல்லு
  • குட்டான் (பனங்கட்டிக் குட்டான்)
  • மூக்குப் பேணி

வெளி இணைப்புகள்[தொகு]