தமிழர் சமூக அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு சமூகத்தில் இருக்கும் குழுக்களுக்கிடையான உறவுகளையும், அந்த சமூகத்தின் அமைப்புகளினது நடைமுறைத் தன்மையையும் சமூக அமைப்பு என்ற கருத்துரு சுட்டுகிறது. தமிழர் சமூக அமைப்பு சாதிய படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. முன்னர் சாதிய அடுக்கமைவும், வர்க்க வேறுபாடும் இணையொத்து இருந்தாலும், தற்காலத்தில் அவை பல இடங்களில் வேறுபடுகின்றன. அதாவது மரபு ரீதியாக உயர் சாதி பிராமணர் பொருளாதார ரீதியாக ஏழையாகவும் (underclass), தாழ்த்தப்பட்ட ஒருவர் பொருளாதார ரீதியாக பணக்காரர் ஆகவும் இருக்கலாம். தமிழர் சமூக அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம்.

தற்கால தமிழர் சமூக அமைப்பில் சமூக மேல் அசைவியக்கம் (social mobiliazation) இருக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_சமூக_அமைப்பு&oldid=3301109" இலிருந்து மீள்விக்கப்பட்டது