தமிழர் காசு இயல் (நூல்)
தமிழர் காசு இயல் | |
---|---|
நூல் பெயர்: | தமிழர் காசு இயல் |
ஆசிரியர்(கள்): | நடன காசிநாதன் |
வகை: | வரலாற்றுப் பதிவு நூல் |
இடம்: | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | Xii + 194 |
பதிப்பகர்: | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |
பதிப்பு: | மகேந்திரா கிராபிக்சு, சென்னை |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
தமிழர் காசு இயல் என்பது நாணயவியல் அறிஞர் நடன காசிநாதன் என்பவரால் எழுதப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட வரலாற்று பதிவு புத்தகமாகும்.
உள்ளடக்கம்
[தொகு]இதில் தமிழக்த்தில் கிடைத்த காசுகள் மற்றும் தமிழக நாணயவியல் பற்றிய தோற்றமும் 16 வகையான மன்னர்கள் வெளியிட்ட காசுகளும் அவை வரலாற்று நிறுவலில் வகித்த பங்குகளையும் பற்றியும் பதியப்பட்டுளது. இதில் முத்திரைக்காசுகள், சங்ககாலம், ரோமானியர், சாதவாகனர், களப்பிரர், சீனர், பல்லவர், சோழர், பாண்டியர், கண்டகோபாலன், வீரச்சம்பன், விசயநகர வேந்தர், மாவலி வாணாதிராயர், வேணாட்டார், நாயக்கர், மராட்டியர் ஆகியவர்கள் வெளியிட்டு தமிழகத்தில் அகழ்வாய்வுகளில் கண்டேடுக்கப்பட்ட காசுகளை பற்றிய குறிப்புகள் உள்ளன.
முக்கியத்துவம்
[தொகு]தமிழக வரலாற்று நிறுவலில் கல்வெட்டுகளை தொடர்ந்து நாணயவியலின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நோக்கில் தமிழக வரலாற்று நிறுவலில் சில முக்கியமான மன்னர்கள் வெளியிட்ட காசுகளை பற்றி எழுதப்பட்ட நூலாகும்.