தமிழர் அடையாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழர் அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாக் கொண்டது. தமிழை தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழ் மொழியை அறிந்திரா விட்டாலும் தமிழர் பண்பாடு அல்லது தமிழர் பின்புலத்தில் இருந்து வந்து தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்துவோரும் தமிழர் ஆவர். தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு மற்றும் தமிழீழம் ஆகியவற்றில் வசித்து, தமிழ் மொழி பேசி தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் அவர்களும் தமிழர் ஆவர்.

தமிழர் அடையாளம் தொடர்பான வரையறைகள் வெவ்வேறு பார்வைகளுக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டு நிற்பவை. தமிழர் அடையாளம் நிரந்தர வரையறையற்றது, இயங்கியல் தன்மை கொண்டது. பல்வேறு தளங்களில் வெவ்வேறு வரையறைகளை அல்லது வெளிப்படுத்தல்களை கொண்டது.

1911 பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் வரையறை[தொகு]

http://www.1911encyclopedia.org/Tamils

தமிழ் லெக்சிகன்[தொகு]

தமிழன் tamiḻaṉ , n. < id. 1. One whose mother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழி யாக உடையவன். 2. A Tamilian, as dist. fr. āriyaṉ; ஆரியனல்லாத தென்னாட்டான். தமிழ் லெக்சிக்கன்

தமிழர் அடையாளம் சமய சார்பற்றது[தொகு]

தமிழர் அடையாளம் சமயம் சார்பற்றது, தேவையற்றது. இன்று ஏராளமான தமிழர் இந்துக்கள் ஆயினும், தமிழர் அடையாளம் சமயம் சார்ந்து அமையவில்லை. தமிழர்கள் இஸ்லாம், கிறிஸ்தவம், சிறுதெய்வ வழிபாடுகள் போன்ற பல்வேறு சமய பிரிவுகளை பின்பற்றுவதால் தமிழர் அடையாளம் ஒரு குறிப்பிட்ட சமயம் சார்ந்து இருக்க இயலாது. சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் தாக்கத்தினால் குறிப்பிடத்தக்க அளவு தமிழர் சமயம் அற்று இருப்பதினாலும் தமிழர் என்ற அடையாளத்தை சமயத்துடன் தொடர்பு படுத்த முடியாது. மேலும், தமிழர் சங்க மரபில் சமயத்தின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது என்பதும் இங்கு குறிப்படத்தக்கது.

சட்ட - அரசியல் அடையாளம்[தொகு]

தமிழ்நாடு (இந்தியா), தமிழீழம் (இலங்கை), சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழர் என்பதற்கு சட்ட அரசியல் வரையறையும் உரிமைகளும் உண்டு. தமிழ் மொழியை கற்க, தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாத்து வளர்க்க தமிழர்களுக்கு இந்த நாடுகளில் சட்ட அரசியல் உரிமைகள் உண்டு.

தமிழர் புவியியல் சார் அடையாளம்[தொகு]

சாதியக் கட்டமைப்பும் தமிழர் அடையாளமும்[தொகு]

- ஆதவன் தீட்சண்யா

தமிழன் என்று சொல்வது வெட்டிப் பெருமை: ஆதவன் தீட்சண்யா நேர்காணல்: மினர்வா & நந்தன்

வெளி ஆதிக்க எதிர்ப்பு[தொகு]

தமிழர் அடையாளம் ஒரு வெளி ஆதிக்க எதிர்ப்பு அடையாளமாகவே வரையப்படுகின்றது. காலனித்துவ எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு இவற்றுக்கு எடுத்துக்காட்டு. இருப்பினும் சமூகத்துனுள்ளேயே இருக்கும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலைத் தடுப்பதையோ, அல்லது தாழத்தப்பட்டோர் சமத்துவத்தை வேண்டுவதையோ எந்த அளவுக்கு இந்த அடையாளம் உந்தியது என்பது கேள்விக்குரியதே.

சோழரின் 'ஆண்ட பரம்ப்பரை' என்ற கோசம், வெளி ஆதிக்க எதிர்ப்புக்காக பயன்படுத்தப்படுவதும், அதுவே உள் அதிகாரச் செலுத்தலுக்கான வழியாக அமைவதும் இந்த அடையாளப்படுத்தலில் இருக்கும் ஒரு முரண்.

தமிழர் குறியீடுகள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: தமிழர் குறியீடுகள்

தமிழர் பண்பாட்டோடு ஆழமான நெருக்கமுடைய அடையாளக்கூறுகளாகும். இவை பொருட்கள், விளையாட்டுகள், கருவிகள் போன்ற இன்னோரன்ன அடையாளங்களாக இருக்கலாம்.

தலைப்புடன் தொடர்புடைய நூற்கள்[தொகு]

  • Willford, Andrew C. (2006). Cage of Freedom: Tamil Identity and the Ethnic Fetish in Malaysia.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_அடையாளம்&oldid=2445137" இருந்து மீள்விக்கப்பட்டது