உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழரசன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழரசன்
திரைப்பட வெளியீடு பதாகை
இயக்கம்பாபு யோகேஸ்வரன்
தயாரிப்புஎஸ். கௌசல்யா இராணி
கதைபாபு யோகேஸ்வரன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்பு
கலையகம்எசுஎன்எசு மூவிசு
விநியோகம்சக்தி பிலிம் பாக்டிரி
ஜீ5
வெளியீடு22 ஏப்ரல் 2023 (2023-04-22)
ஓட்டம்129 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தமிழரசன் 2023ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி பரபரப்பு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கினார்.[1]

கதைச் சுருக்கம்

தமிழரசன் ஒரு இரக்க குணமுள்ள காவல்துறை அதிகாரி. அவரது மகன் பிரபாகர் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பேராசை கொண்ட மருத்துவமனை ஊழியர்களால் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய புறக்கணிக்கப்படுகிறார். இதனால் தமிழரசன் மருத்துவமனையைக் கைப்பற்றுகிறார். ஆனால் அவர் ஊழல் நிறைந்த மேல்நிலை அதிகாரி டிசிபி ராணா பிரதாப் சிங் மற்றும் அவரது தனிப்பட்ட எதிரிகளிடமிருந்து தடைகளை எதிர்கொள்கிறார்.

நடிகர்கள்

இசை

தமிழரசன்
இசை
வெளியீடு25 பெப்ரவரி 2023
ஒலிப்பதிவு2019–2020
இடம்சத்தியம் திரையரங்கம் சென்னை
ஸ்டுடியோதிவோ
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்32:42
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்திவோ
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
இளையராஜா காலவரிசை
விடுதலை பகுதி 1
(2023)
தமிழரசன்
(2023)
கஸ்டடி
(2023)

இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்[2]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "தமிழனோட வீரமெல்லாம்"  ஏஆர்பி ஜெயராம்சித் ஸ்ரீராம் 5:04
2. "யாவும் யாவுமே"  ஏஆர்பி ஜெயராம்வி. வி. பிரசண்ணா, விபாவாரி 5:08
3. "பாக்குறப்போ பாக்குறப்போ"  ஏஆர்பி ஜெயராம்இளையராஜா, நீத்தி மோகன் 5:12
4. "நீதான் என் கனவு"  பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:19
5. "பொறுத்தது போதும்"  ஏஆர்பி ஜெயராம்கே. ஜே. யேசுதாஸ் 4:31
6. "தமிழரசன் (தலைப்பு பாடல்)"  மதன் கார்க்கியோகி பி, சூசன், நகசு ஆசிசு 3:28
7. "தமிழன் டா"  மதன் கார்க்கிநகசு ஆசிசு, அர்ஜுன் சாண்டி 5:00
மொத்த நீளம்:
32:42

விமர்சனங்கள்

தினமலர் நாளிதழில் வந்த விமர்சனத்தில், "மருத்துவமனையில் உள்ளவர்களை விஜய் ஆண்டனி பிணயக் கைதியாக பிடித்து வைத்ததுமே, படம் இப்படித்தான் போய் முடியும் என நம்மால் யூகித்துவிட முடிகிறது. அதுவரையிலான அவருடைய போராட்டத்தில் பாசப் போராட்டம்தான் அதிகம் இருக்கிறது. வேறு எந்த ஒரு அதிரடியும் இல்லாததால் சுவாரசியமாக ரசிக்க முடியவில்லை" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[3]

ஆனந்த விகடன் நாளிதழில் வந்த விமர்சனத்தில், "தன் மகனைக் காப்பாற்ற மருத்துவமனையையே விஜய் ஆண்டனி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் காட்சிகளில் ஏராளமான லாஜிக் குறைபாடுகள் என்றால் இறுதியில் வில்லன்கள் அனைவரும் வரிசைகட்டி ஒவ்வொருவராகத் திருந்துவதெல்லாம் செம போங்கு பாஸ். [4]எதை முதன்மைப்படுத்திச் சொல்வது, அதை எப்படிச் சொல்வது என்பதில் தடுமாறி நிற்கிறான் தமிழரசன்" என்று எழுதி 38/100 மதிப்பெண்கள் வழங்கினர்.

மேற்கோள்கள்

  1. "Vijay Antony and Remya Nambeesan starrer 'Tamilarasan' set for its OTT premiere". The Times of India. 9 June 2023 இம் மூலத்தில் இருந்து 12 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230612110642/https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/vijay-antony-and-remya-nambeesan-starrer-tamilarasan-set-for-its-ott-premiere/articleshow/100878467.cms. 
  2. "Ilayaraja composes music for 'Thamezharasan' at his Chennai residence". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 7 January 2020. Archived from the original on 9 March 2021. Retrieved 1 February 2021.
  3. "தமிழரசன் - விமர்சனம் {2/5} : தமிழரசன் - ரசனை கடந்து… - Tamilarasan". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2025-12-28.
  4. விமர்சனக்குழு, விகடன் (2023-04-27). "தமிழரசன் - சினிமா விமர்சனம்". vikatan.com/. Retrieved 2025-12-28.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழரசன்_(திரைப்படம்)&oldid=4512073" இலிருந்து மீள்விக்கப்பட்டது