தமிழக வறட்சி 2016 - 17

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக வறட்சி 2016–17 (2016–17 Drought in Tamil Nadu) தமிழ்நாட்டு விவசாயிகளின் பேரிடராகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான மழைப்பொழிவால் இது நிகழ்ந்தது. தமிழ்நாட்டிற்கு மழை தரக்கூடிய பருவமான வடகிழக்குப் பருவக்காற்றுக் காலம் மிகக்குறைவான மழைப்பொழிவை மட்டுமே தந்ததால் விவசாயிகளின் தேவைகள் தணிக்கப்படவில்லை.[1]

வடகிழக்குப் பருவக்காற்று[தொகு]

கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத மோசமான மழைப்பொழிவை 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்கொண்டது. தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு சிறிது சிறிதாகக் குறைந்து 2016 இல் 62% ஆனது. வடகிழக்குப் பருவமழை ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே பொழிந்தது. 2016 இல் இந்திய மாநிலங்களின் பற்றாக்குறையில் அதிக அளவு பற்றாக்குறையாக 82% தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டது.[2]

தமிழ்நாட்டின் கருகிய பயிர்கள்[தொகு]

நீா்ப்பாசனத் தேவையைவிக்ட குறைந்த மழைப்பொழிவு ஏற்படும் காலங்களில் தமிழ்நாட்டின் வேளாண்மை இடிபோன்ற அடியை எதிர்கொண்டது. காவிாி நதிநீா் சா்ச்சையும் நீா்ப்பாசனத்திற்குாிய ஓர் வழியான காவிாியின் துணையாறுகளில் நீா்வரத்து இல்லாததும் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பாிய சிக்கலானது. இலட்சக்கணக்கான எக்டேர் நிலப் பயிா்கள் கடுமையாகத் கருகின. தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத மோசமான அறுவடை இவ்வாண்டு ஏற்படும் எனக்கூறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NE Monsoon Worst In 140 Years, 144 Farmers Dead, Tamil Nadu Declares Drought". IndiaSpend. 2017-01-10. Archived from the original on 2017-01-28. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
  2. "Northeast Monsoon to end on deficit note for Tamil Nadu". Skymet Weather. 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
  3. "Tamil Nadu declares drought as 144 farmers die amid worst North East monsoon in 140 years". Firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_வறட்சி_2016_-_17&oldid=3737610" இலிருந்து மீள்விக்கப்பட்டது