உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழக நதிநீர் இணைப்புத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது இந்திய மாநிலமான தமிழகத்தில், மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை கால்வாய்கள் மூலம் இணைத்து, மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி வெள்ளநீரை வறட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் திட்டம் ஆகும்.

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்

[தொகு]

மழைக் காலங்களில் அணைகளில் போதிய நீரை சேமித்து வைத்தாலும், தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளிலிருந்து 13.8 டி.எம்.சி (அ) 13,800 மில்லியன் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது.

திருநெல்வேலியிலிருந்து தாமிரபரணியின் உபரி நீரை ராதாபுரம், நாங்குநேரி போன்ற வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல ரூ.369 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன

இத்திட்டத்திற்கு வெள்ளநீர் கால்வாய் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வெள்ளநீர் கால்வாய் திட்டம்

[தொகு]

தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்புத் திட்டமாகக் கருதப்படும் இத் திட்டத்தின்படி, தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 நதிகள் இணைக்கப்படுகின்றன.

இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 23040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுவதுடன் 50 கிராமங்கள் பயன்பெறும்.

இதன் முதல் கட்டப் பணிகள் 21 பிப்ரவரி 2009 அன்று தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி, கன்னடியன் கால்வாயை அகலப்படுத்தி, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே கன்னடியன் கால்வாயின் 3-வது அணைக்கட்டிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் எம்.எல். தேரி வரை 73 கி.மீ. தொலைவுக்கு வெள்ளநீர் கால்வாய் வெட்டப்படுகிறது. இதனால் சாத்தான்குளம் வட்டம், சுப்புராயபுரத்தில் 2 டி.எம்.சி (அ) 2 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கும் வகையில் 2 அணைக்கட்டுகள் கட்டப்படுகின்றன.

இத்திட்டப் பணிகள் 2012ஆம் ஆண்டு முடியும்.

தடைக்கற்கள்

[தொகு]

எதிர்காலத்தில் வெள்ளக் காலங்களில் மட்டுமல்லாமல், எல்லா காலங்களிலும் நீரை பங்கிட வேண்டிய சூழ்நிலை வரலாம் என்ற அச்சத்தின் காரணமாக கன்னடியன்கால்வாய் விவசாயிகள் சங்கத்தினர் இத்திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம்

[தொகு]

இத்திட்டத்தின்படி, காவிரி, அக்னியாறு, தென்வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் 4 டி.எம்.சி (அ) 4 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம். இதன் திட்ட மதிப்பு ரூ. 2,180 கோடி ஆகும். இத்திட்டம் பல கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக காவிரி-கட்டளைக்கால்வாய் ஆகியவற்றை இணைக்க ரூ.189 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதல் கட்டப் பணிகள்

[தொகு]

காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் திட்டத்தினை நிறைவேற்றிட 24 ஜூன் 2008 அன்று பணிகள் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டம் மாயனூரையும், நாமக்கல் மாவட்டம் சீலைப்பிள்ளையார் புதூரையும் இணைக்கும் வகையில், மாயனூர் காவிரியாற்றில் படுகையணையை கதவணையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் முதல் 1.4 டி.எம்.சி (அ) 1.4 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம்.

இத்திட்டப் பணிகள் 2011ஆம் ஆண்டு முடியும்.

தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டம்

[தொகு]

இத்திட்டதிற்கான தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]